பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 அணுவின் ஆக்கம்

மாப்பொருளேயுடைய ஏனேய உணவுவகைகள் ஆகியவற் றையும் தயார் செய்கின்றன. இப்பொருள்களிலுள்ள ஆற்றல் எல்லாம் வேதியல் வடிவில் இருக்கின்றது. இந்த ஆற்றல் இயக்கத்திலுள்ள ஆற்றல் அன்று ; மரக்கூரிலும் மாப் பொருளிலுமுள்ள அனுத்திரளேயின் அணுக்கள் பிணைந் திருக்கும் கொக்கிகளில்" அடங்கிக் கிடக்கின்றன. வேதியல் ஆற்றல்' என்பது இறுக்கமாகச் சுற்றப் பெற்றுள்ள. நீள் சுருளில்' அடங்கிக் கிடக்கும் மீள் சக்தியைப்" போன்று சேமித்து வைக்கப்பெற்றுள்ள ஒருவகை ஆற்ற லாகும். மேற்கூறிய வடிவுகளிலுள்ள ஆற்றல் எல்லாம் அமைதியாகவும் கண்காணு நிலையிலும் நீள்சுருள், எரியை, மலைமீதிலுள்ள பனிக்கட்டி ஆகியவற்றில் சேமிக்கப் பெற். றிருக்கின்றது. அது மனிதனுடைய வினையை ஆற்றவல்ல இயக்கமாகவும், சூடாகவும், மின்னுற்றலாகவும் விடுவிக்கப் பெறும்.

எரியைகள்" : நீள் சுருளிலுள்ள ஆற்றலை விடுவிப்பது போலவே, வேதியல் ஆற்றலையும் விடுவிக்கலாம். அணுக் களிடையேயுள்ள கொக்கிகள் தளர்த்தப் பெற்றதும் ஆற்றல் வெளிப்படுகின்றது. தாவரப் பொருள்களைப் பொறுத்தமட்டி லும் இது எளிதாகிறது ; அவைகளேச் சூடாக்கி விட்டாலே போதும். சூடு சேர்ந்ததும் அதன் சூட்டுநிலை உயருகின்றது; அஃதாவது, அணுத்திரளேகளின் அதிர்ச்சியையும்" இயக் கத்தையும்" அதிகரிக்கச் செய்கின்றது. இதுவே அணுத் திரளைகளைப் பிணைத்து வைத்திருக்கும் கொக்கிகளைத் தளர் வடையச் செய்து விடுகிறது ; இதல்ை அணுத்திரளைகள் சிதைவடைந்து" நீராவியாகவும் மரக்கரியாகவும்" மாறு கின்றன. காத்றிலுள்ள உயிரியம் சேர்வதற்கு வாய்ப்பு ஏற் பட்டால், நீ உயிரியத்துடன் சேர்ந்து நீராகமாறுகிறது; கரி உயிரியத்துடன் சேர்ந்து கரியமிலவாயுவாகின்றது. இது

  • @ 357 & 5 - bond. “ GsustuisbesihÈpsb - chemical energy. * (55ir GrojSir - spring. * 15 siréféð - elasticity. * எரியைகள் - fuels. அதிர்ச்சி - vibration. ” இயக்கம் - motion. * floo;6165- - decompose. “ ins&#f charcoal.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/64&oldid=599349" இலிருந்து மீள்விக்கப்பட்டது