பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அணுவின் ஆக்கம்


துச் சிதைந்து உருமாறியதன் விளைவே என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு எரியைகளிலும் ஆற்றல் அதிகம் அடங்கியுள்ளது; அவற்றை ஓரிடத்திலிருந்து பிறி தோரிடத்திற்கு எளிதில் கொண்டு செல்லலாம் ; தேவைப் படுங்கால் கச்சிதமாக அவற்றிலிருந்து ஆற்றல் தேவை யான அளவு கிடைக்குமாறு செய்துகொள்ளலாம். அதுவும், தானேடியின் பொறியில் எண்ணெய் சொட்டுச் சொட்டாக விழும்படி செய்துகொள்ளவும் முடியும்.

உணவுவகைகள் : வேதியல் முறையில் நோக்கினுல் உணவுவகைகளும் எரியைகளே. காரணம், அவை விலங்குலின் இயக்கத்திற்குத்27 தேவையான ஆற்றலை அளிக்கின்றன. உடல் வளர்ச்சிக்கும் தேய்விற்கும் வேண்டிய ஊட்டப் பொருள்களே அவை அளிக்கின்றன என்றாலும், எல்லா உணவுகளிலும் பெரும்பகுதி ஆற்றல் கிடைப்பதற்காகவே எரிக்கப்பெறுகின்றன. எரியைகளைப்போல உணவு சுவாலேயுடன் எரிவதில்லை. காரணம், உடலின் சூட்டு நிலையை அதிகரிக்காது எரிதல-சரியாகச் சொன்னால் ஆக்ஸிகரணத்தை28-நடத்திவைக்கும் வியத்தகு திறனை உடல் பெற்றிருக்கின்றது. ஆணுல், மாப்பொருள் களும் சருக்கரைப் பொருள்களும், கொழுப்புப் பொருள் களும் பிசிதங்களும், ஒரு பொறியினுள் எரியைகள் எரிவது போல், உடலினுள் எரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் சிக்கலான அணுத்திரளைகள் எளிதானவைகளாக உடைக்கப்பெறுகின்றன. இவை நுரையீரல்களிலிருந்து குருதியோட்டதினால் கொண்டுவரப்பெறும் உயிரியத்தைத் தாக்கி அஃதுடன் சேர்ந்து கரியமிலவாயுவாகவும் நீராகவும் மாறுகின்றன. இந்த இரண்டு பொருள்களும் கழிவுப் பொருள்களாக அகற்றப்பெறுகின்றன. இந்தக் கிரியையில் உடலி லுள்ள தசையும் நரம்பணுக்களும் ஆற்றலைப் பெற்று தம் வேலைகளைச் செய்துகொள்ளவும் உடலை வெப்பநிலையில் வைத்திருக்கவும் பயன்படுத்துகின்றன.


27இயக்கம்-action.

28ஆக்ஸிகரணம் -oxidation.