பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றல்

51


உணவுகளே அவை கொண்டுள்ள ஆற்றலின் அளவைக் கொண்டு மதிப்பிடுகின்றனர். கனலி என்ற சூட்டளவினைக் கொண்டு இது குறிக்கப்பெறுகின்றது. கனலி என்பது என்ன?. ஒரு கிராம் நீரை, சூடளப்பானில்39 ஒரு சுழி (டிக்ரி) அளவு சூடேற்ற எவ்வளவு சூடு வேண்டுமோ அந்த அளவு சூட்டினைக் கனலி என்று குறிப்பிடுவர் பெளதிக அறிஞர். நடுத்தர வேலை செய்யும் ஒரு மனிதர் சுகாதாரத்துடன் வாழ்வதற்கு நாளொன்றுக்கு 3000 கனலி சூடு தேவைப்படுகிறது. அரிசிச்சோறு, பருப்பு, கிழங்குகள், காய்கறிகள், பழங்கள், பால், சருக்கரை, நெய் போன்ற கலப்புணவினை நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று இராத்தல் உண்டு 3000 கனலி சூட்டினைப் பெறலாம்.

வேதியல் ஆற்றல் : உணவு வகைகளிலும் எரியைகளிலும் சேமித்து வைக்கப் பெற்றிருக்கும் ஆற்றல் கடற்பஞ்சு நீரில் தோய்ந்திருப்பதுபோல் தோய்ந்திருப்பதில்லை. அந்த ஆற்றல் அப்பொருள்களின் இயல்பான பகுதிகளில் ஒன்றாய் விடுகின்றது ; அது அவற்றின் அமைப்பிலேயே அமைந்து அப்பொருள்களாகவே ஆகிவிடுகின்றது. எனவே, அது அப்பொருள்களின் வேதியல் அமைப்பில் மிகச் சிறியதாகவுள்ள துணுக்குகளில் அமைந்து கிடக்கின்றது. இந்தத் துணுக்குகளைத்தான் நாம் அனுத்திரளைகள் என்று வழங்குகின்றோம். அவற்றைக் கண்ணினால் பார்க்க முடியாது. ஏன்? மிகச் சிறந்த பெருக்காடிகளின் மூலமும் காண இயலாது. எல்லாப் பொருள்களுமே இத்தகைய சிறிய அணுத்திர ஆளகளால் ஆனவை. அவற்றைச் சிதைக்கக்கூடிய எதுவும் அப்பொருளையே அழித்து எளிய பொருள்களாக உடைத்து விடுகின்றது. எடுத்துக்காட்டாக, எரிதல் என்ற நிகழ்ச்சி புகையாகவும், சாம்பராகவும், கரியமில வாயுவாகவும், நீராகவும் மாற்றிவிடுகின்றது; உயிருள்ள பிராணிகளிடம் அதே கிரியை கரியமில வாயுவாகவும் நீராகவும் மாற்றிவிடுகின்றது. ஆற்றல் விடுவிக்கப் பெறுகின்றது என்ற மெய்ம்மையிலிருந்து ஆக்ஸிகரணத்தின் விளைபொருள்களிலிருக்கும்


39சூடளப்பான்-thermometer.