பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அணுவின் ஆக்கம்


சாம்பர்தான் உண்டாகின்றன. இங்கு நடைபெறுவது வேதிமாற்றம். இந்த மாற்றத்தில் அனுத்திரளைகள் அணு அணுவாக விடுபட்டு வேறு அனுத்திரளைகளாக மாறின. 'இல்லது வாராது; உள்ளது போகாது' என்பது வேதியல் உண்மை. அணுத்திரளைகள் திரளும்பொழுது உள்ளடங்கி யிருந்த ஆற்றல்தான் அவை சிதையும்பொழுது வெளியாயிற்று. அணுத்திரளைகள் திரளும்பொழுது இச்சூட்டைத் தாவரங்கள் கதிரவனிடமிருந்து பெற்ற ஒளியையும் சூட்டையும் விழுங்கியதால் கிடைத்தது என்பதை மேலே கண்டோம். சரியான முறையில் சொன்னால், வேதியல் மாற்றத்தால் விடுபடும் ஆற்றலேத்தான் அணுவாற்றல் என்று சொல்லவேண்டும்.

ஆனால், இன்று அணுவாற்றல் என்று வழங்கப்பெறுவது எது? அவ்வாற்றல் புதியவகை எரியையிடமிருந்து வருகிறது. அதுதான் அணு எரியை.42 அந்த ஆற்றல் அணு வின் உள்ளிருந்து, அஃதாவது அதன் உட்கருவி43 லிருந்து வெளிப்படுகிறது. அவ்வாற்றலை உட்கரு ஆற்றல் என்று. வழங்குவதுதான் பொருத்தம். முதலில் மக்கள் அதனே 'அணுவாற்றல்' என்று தவறாக வழங்கிவிட்டனர் ; அப்பெயரே வழக்கத்திலும் வந்துவிட்டது. இப்புதிய ஆற்றலை மெக்ஸிகோ பாலைவனத்தில் முதன் முதலாக வெளிப்படுத்தி அதன் அளவற்ற திறனை அறிந்தனர். 1945-ஆம் ஆண்டு ஜூலே மீ 16-ம் நாள் இச்சோதனை நடைபெற்றது. பல டன் எடையுள்ளதும் ஆறரை படைசால்44 குறுக்களவுள்ளதுமான ஒரு வட்ட வடிவமான எஃகுக் கோபுரத்தின்மீது அணு குண்டை வீழ்த்தி 'சர்வ சம்ஹார ஒத்திகையை நடத்தினர் அமெரிக்கர். விளைவு என்ன? எஃகுக் கோபுரம் பொடிப் பொடியாகப் போய் காற்றில் பறந்துவிட்டது. மணல் உருகி கண்ணுடியாக மாறிவிட்டது. அதே ஆண்டு ஆகஸ்டு 6-ஆம் நாள் ஹிரோஷிமாவிலும் அடுத்து மூன்று நாட்கள் கழித்து நாகஸாகியிலும் இந்த ஊழிக் கூத்து நடை-


42அணு எரியை-atomic fuel 43உட்கரு-nucleus 44படைசால்-furlong