பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றல்

55


பெற்றது. அந்நகரில் ஏற்பட்ட விளைவைப் பத்திரிகைகளில் கண்டோம். இவ்வுலகத்தின் தலை எழுத்து அணுகுண்டில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் இப்பொழுது அறிகின்றோம். குறளின் சிறப்பைக் கூற வந்த ஒளவையார். மாந்தர் உள்ளும் கருத்துக்கள் குறளில் அடங்கியிருக்கிறது என்பதை,

அணுவைத் துளேத்து.ஏழ் கடலேப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

என்று கூறினார். அணுவைப் பொறுத்த மட்டில் இஃது உண்மையாகிவிட்டது. அணுக்கருக்கள் சிதைவினால்ல் ஏழு கடலின் ஆற்றலும் வெளிப்பட்டுவிட்டது. ஓர் இராத்தல் அணுகுண்டின் ஆற்றல் ஐம்பது இலட்சம் இராத்தல் நிலக்கரியின் ஆற்றலுக்கும், முப்பது இலட்சம் காலன்45 பெட்ரோல் எண்ணெயின் ஆற்றலுக்கும் சமம் என்று பேசுகிறார்கள். பதினைந்து இராத்தல் தூய்மையான அணுவாற்றல் பொருளைக்கொண்டு நான்கு கோடி இராத்தல் நிலக்கரியால் கிடைக்கும் ஆற்றலை யெல்லாம் பெற்றுவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அணுக்கருவிலிருந்து வெளிப்படும் ஆற்றலை அடுத்து காண்போம்.


45 காலன் - gallon.