பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்கிலை விளைவும்

அணுவின் உட்கருவில்தான் அதன் ஆற்றல் முழுவதும் உறங்கிக் கிடக்கின்றது என்பதை மேலேகண்டோம். இவ்வாறு உறைந்து கிடந்த ஆற்றலை வெளிப்படுத்தித் தான் அணுகுண்டு ஆக்கப்பெற்றது. முதன் முதலில் யுரேனியம் என்ற பொருளேத்தான் அணுகுண்டில் பயன்படுத்தினர். யுரேனிய தாதுப் பொருளைச் சோதனை செய்த அறிவியலறிஞர்கள் யுரேனியம் - 234, யுரேனியம் - 285, யுரேனியம் - 288 என்ற மூன்று வகை ஓரிடத்தான்கள்1 இருப்பதைக் கண்டனர் (படம்-7). யு-234 என்ற வகை யுரேனியம் மிகக் குறைந்த அளவே இருந்தது ; அதுவும் அளக்க முடியாத சிறிய அளவில் இருந்தது. எனவே, அணுவாற்றலை வெளிப்படுத்துவதில் அது சிறிதும் பயன்படுவதில்லை. யு-238 என்ற ஓரிடத்தான் 93.8 சதவீதம் இருந்தது; யு-285ன் அளவு 0.7 சதவீதம்தான். அஃதாவது, ஒவ்வொரு யு-235ன் அணுவிற்கும் யு-288ன் அணுக்கள் 140 இருந்தன.

யுரேனியப் பிளவு : யுரேனியத்தைப் பொது இயல் மின்னி கொண்டு தாக்கினால் என்ன ஆகிறது என்பதை அறிவியலறிஞர்கள் ஆய்ந்தனர். யு-238 என்ற யுரேனியம் தன்னைத் தாக்க வரும்பொழுது பொது இயல் மின்னிகளை வாரி விழுங்-


1ஓரிடத்தான்கள்- isotopes.