பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அணுவின் ஆக்கம்


அப்பாற்பட்ட வலிவுடையது. இதைத் தவிர, கருவினச் சுற்றிச் 'சக்கர வியூகங்கள்’ போன்ற பாதுகாப்பு முறைகள் பல வட்டங்களில் அமைந்திருப்பதையும் மேலே கண்டோம். யுரேனிய அணுவில் இத்தகைய ஏழு மண்டலங்கள் அமைந்திருப்பதையும் பார்த்தோம்.* எனவே, யுரேனிய அணுவைப் பிளக்கவேண்டுமானுல் இந்த ஏழு 'சக்கர வியூகங்களையும்’ கடந்து சென்று உட்கருவினே அடைதல் வேண்டும். வயிரத்தை வயிரத்தைக்கொண்டு அறுப்பது போலவே, அணுவும் அணுவின் பகுதிகளாகவுள்ள நேர் இயல் மின்னிகள், பொது இயல் மின்னிகள், எதிர் மின்னிகள் போன்ற மின்னிகளேயே எய்பொருள்களாக (அணு ரவைகளாக)க் கொண்டு பிளக்கப் பெறுகின்றது. கர்ணனிடமிருந்த அரவக் கணை வில்லில் வைத்துப் பெருவேகத்துடன் எய்யப் பெற்றதுபோலவே, இந்த அணு ரவைகளும் அணுச் சிதைக்கும் கருவிகளில் வைத்து அணு என்ற இலக்கை நோக்கி எய்யப் பெறுகின்றன. சில சமயம் அவை உட்கருவினுள் புகுந்து அங்குள்ள பொருள்களை நாலா பக்கங்களிலும் சிதறச் செய்துவிடுகின்றன.

ஒர் அணுவின் உட்கரு சில அணு ரவைகளே உட்கவர்ந்துக்கொண்டாலும், அல்லது அதிலிருந்து சில துணுக்குகள் வெளியேறிகுலும் அந்த அணு பிளக்கப்பெற்று விட்டதாக அறிவியலறிஞர்கள் கூறுவர். உட்கருவினைப் பிணைத்துக்கொண்டுள்ள பெருவிசை தகர்க்கப்பெற்ருய் விட்டது. உட்கருவினுள் சில புதிய துணுக்குகள் சேர்ந்து விட்டன : அல்லது, அதிலிருந்து சில நேர் இயல் மின்னிகளும், பொது இயல் மின்னிகளும், ஆற்றலும் வெளிப்படுத்தப் பெற்றுவிட்டன. இந்த இடத்தில் ஒன்று கவனித்தற்குரியது. அணுத்துணுக்குகள் ஒன்றாகச் சேர்ந்தால் அந்த நிகழ்ச்சி ‘இணைதல்'4 எனப்படும். கதிரவனில் உள்ள அணுக்கள் தம்முள் இணைவதால் ஆற்றல் வெளிப்படுகிறது. நீரிய அணு வெடிக்கும்பொழுது வெளிப்படும் ஆற்றலும் அணு-


* பக்கம்-25. 4இணைதல் - fusion.