பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்நிலை விளைவும்

61


3 x 1.0" சென்டிமீடர் அல்லது 98 கோடி அடி வீதம் செல்லும். இந்தச் சமன்பாட்டின்படி ஆற்றலைப் பெற ஒரு நிமிடத்தில் ஒருபிடி மண்ணே ஆற்றலாக மாற்றும் உலையை அமைக்க முடிந்தால் அதிலிருந்து சுமார் பதினுயிரம் கோடி குதிரைத் திறன்14 அளவுள்ள ஆற்றலைப் பெறலாம். இது தற்சமயம் நம் நாட்டில் எல்லா வழியிலும் பெறப்படும் மொத்த மின்சார ஆற்றலின் அளவைக் காட்டிலும் பதினாயிரம் மடங்குக்குமேல் அதிகம். சிறிதளவே உள்ள பொருளிலிருந்தும் எவ்வளவு அதிகமான ஆற்றலைப் பெறலாம் என்பது இதிலிருந்து தெரியவரும் ஓர் உண்மையாகும்.

ஓர் எலக்ட்ரான் வோல்ட்டு எவ்வளவு என்பது நமக்குத் தெரியும். அஃதாவது, ஓர் எதிர்மின்னி ஒரு வோல்ட்டு மின் அழுத்த வேற்றுமையில் செல்லுங்கால் பெறும் ஆற்றலின் அளவு. ஒரு மில்லியன் எலக்ட்ரான் வோல்ட்டு என்னும் ஆற்றல் எர்க்கில் (தமிழில் எறுழ்15 என்று வழங்குவோமாக) சுமார் ஆறு இலட்சத்தில் ஒரு பங்கு ஆகும். ஒரு குன்றிமணியை ஓர் அங்குலம் நிலக்குத்தாகத் தூக்கினால் சுமார் 400 எறுழ் செலவழியும். இதிலிருந்து எறுழ் என்பது எவ்வளவு சிறிய ஆற்றல் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த எறுழில் ஆறு இலட்சத்தில் ஒரு பகுதி தான் ஒரு மில்லியன் எலக்ட்ரான் வோல்ட்டு என்பது. இத்தகைய சின்னஞ்சிறு தனியனில் (அலகில்)16 சுமார் 200 கொண்ட சிறிய ஆற்றலே ஓர் உட்கருப் பிளவால் வெளி வருகின்றது. ஆகையால் இது எவ்வளவு குறைவு எனத் தெளிவாகும். ஆனால், கோடிக் கணக்கான அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக அநேகமாக ஒரே சமயத்தில் பிளவுற்றால் அதிகமான ஆற்றல் வெளிப்பட முடியும்.


14 குதிரைத் திறன் - horse power. 15 எறுழ் - erg. எறுழ் என்பது ஒரு கிராமின் 980-ல் ஒரு பங்கினை (சராசரி ஆயிரத்தில் ஒரு பங்கினை). ஒரு செ.மீ. உயரம் தூக்குவதற்கு வேண்டிய ஆற்றல். 16 தனியன்-unit.