பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அணுவின் ஆக்கம்

காண்க (படம் 10). முதல் தடவையில் மூன்று பொது இயல் மின்னிகள் வெளியாகி மூன்று யு-235 அணுக்களைத் தாக்கு கின்றன. இரண்டாவது தடவை அவை தாக்கும்பொழுது ஒன்பது பொது இயல் மின்னிகளை வெளிப்படுத்துகின்றன. இவை ஒன்பது உட்கருக்களைத் தாக்கி இருபத்தேழு பொது தொடர்கில விளைவு இயல் மின்னிகளே வெளிப் படுத்தும். இவ்வாறு யு-285 அணுக்கள் உள்ளவரை பொது இயல் மின்னிகள் வெளியேறிக் கருவினைத் தாக்கிக்கொண்டே போகும். யு-235 ஐக் கொண்டு செய்யப் பெற்ற அணுகுண்டு தான் ஹிரோஷிமாவில் வெடித் த்து.

தொடர்நிலை விளேவு ஒரு | நகரில் வதந்தி பரவுவதை ஒத் " திருக்கின்றது. அண்மையில் - முதுகுளத்துாரில் நடைபெற்ற படம் 10. கலகத்தை நாம் அனைவரும் அறிவோம். முதுகுளத்து ர்ப் பகுதிகளில் வகுப்புக் கலவரம் நடைபெறப் போவதாக மதுரை மாநகரில் ஒரு அரசியல்வாதி ஒருவரிடம் கூறுவ தாக வைத்துக்கொள்வோம். அவர் அதை மூவரிடம் கூறுகிருர். அதை அவர்கள் உடனே ஒன்பது பேரிடம் கூறு கின்றனர். இவ்வகையில் வதந்தி பலரிடம் பரவி ஊரே அமர்க்களப்படும் நிலையினைக் காணலாம் : அண்மையில் இதனைக் கண்டோம். தாக்குதல் நிகழப் போவதாக முதுகுளத்துர்ப் பகுதி மக்களிடம் வதந்தி பரவிப் பலரைச் "சிம்ம சொப்பனம் காணும்படி செய்துவிட்டதை நாம் அறிவோம். இதைப்போலவே, ஒரு பொது இயல் மின்னி யில் தொடங்கும் யுரேனியப் பிளவு எம்மருங்கும் பரவி மாபெரும் விளைவாக மாறுகின்றது. இந்த விளைவில்ை கட்டுக் கடங்காத ஆற்றல் வெளிப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/80&oldid=599385" இலிருந்து மீள்விக்கப்பட்டது