பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்நிலை விளைவும்

65


இதை இன்னொரு எடுத்துக் காட்டாலும் விளக்கலாம். இராமாயணத்தில், 'மூலபல வதை' என்று கேள்விப்படுகின்றோம். அண்டங்களிலுள்ள அரக்கர்கள் அனைவரும் வந்து இலங்கையில் திரளுகின்றனர். படையின் பெருக்கத்தைக் கண்டு தேவர்களும் அஞ்சுகின்றனர். இராமன் அம்புமாரிகளைப் பெய்தும் அப்படை குறைவுபடாமல் இருக்கின்றது. உடனே 'காந்தர்வாஸ்திரம்' என்னும் படையை ஏவுகிறான் இராமன். அரக்கர்கள் மோகமடைகின்றனர். எம்மருங்கும் கணக்கில்லாத இராமர்கள் இருப்பதாக. அவர்கள் கண்ணுக்குப்படுகின்றது. இராமன் ஒருவன் தான். என்ற உணர்ச்சி மறைந்து விடுகின்றது. 'இங்கேயுளன், இங்குளன், இங்குளன்' என்று தம் அருகிலுள்ளவர்களை இராமன் என்று அரக்கர்கள் எண்ணி ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டு, மடிகின்றனர். மூலபலம் ஒரு நொடிப்பொழுதில் அழிந்துபடுகின்றது. இராமன் எய்த ஒரு தனி அம்பு மூலபலம் என்னும் பெரும்படையை அழித்ததற்குக் காரணமாக இருந்தது போல, ஒரு யுரேனியக் கருவி னின்றும் வெளிப்பட்ட ஒரு பொது இயல் மின்னி பல்லாயிரங்கோடி யுரேனிய அணுக்கள் சிதைந்து அழியக் காரணமாக இருக்கின்றது.

இந்தத் தொடர் நிலை விளைவு கொள்கையளவில் சாத்தியப்படலாம். நடைமுறையில் இவ்விளைவு நிகழ்வதில் பல தொல்லைகள் உள்ளன. ஒரு யுரேனியப் பிளவால் வெளிவரும் பொது இயல் மின்னி மற்றொரு அணுக்கருவைத் தாக்குவதென்பது, மிகவும் அரிய செயல். காரணம், யுரேனியத்தை யொத்த கனமான பொருளிலும் அணுக்க எளிடையேயுள்ள தொலைவு மிகவும் அதிகமாகவே இருக் கின்றது. மகிமாச்சித்தர் ஒருவர் யுரேனியக் கருவை மாம்பழம் அளவுக்கு பெருக்கமடையச் செய்கிறார் என்று கொள்வோம். அப்பொழுது இரண்டு உட்கருக்களிடையேயுள்ள தூரம் சுமார் ஐந்து மைல் இருக்கும். ஐந்து மைல்களுக்கு ஒன்றாகவுள்ள மாம்பழங்களின் இடையே ஒருவிதக் குறியுமின்றி நாம் ஒரு கல்லை விட்டெறிந்தால் அக்கல் மாம்பழங்களில், ஒன்றைத் தாக்க எவ்வளவு வாய்ப்பினைப் பெற்

53-6