பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அணுவின் ஆக்கம்


புளுட்டோனியம். இவற்றின் இடப்புறத்தின் கீழ் எழுதப்பெறும் எண் அவற்றின் அனு-எண்; இது மின்னூட்டத்தைக் குறிக்கும். இவற்றின் வலப்புறத்தின் மேல் எழுதப் பெறும் எண் அவற்றின் அணு-எடையைக் குறிக்கும்.

இவ்வாறு உண்டான புளுட்டோனியம் யு-288ஐப்போல் பொது இயல் மின்னியைச் சிறை செய்வதில்லை. எனவே, இதன் கருவை ஒரு பொது இயல் மின்னி கொண்டு தாக்கினால், அது சிதைந்து பல பொது இயல் மின்னிகளே வெளியேற்றுகின்றது. இவ்வாறு வெளியேறும் பொது இயல் மின்னிகள் தொடர்நிலை இயக்கத்தை விரைவில் உண்டாக்கும். யு-238 லிருந்து யு-285 ஐப் பிரிப்பது அருமை எனக் கண்டோம். ஆனால், யு-238 ல் பல்கிக் கிடைக்கின்ற புளுட்டோனியத்தை எளிதில் படைத்துவிடலாம். இவ்வாறு; படைத்த புளுட்டோனியத்தையே புதிய அணுகுண்டில் புகுத்தி நாகஸாகி என்ற நகரத்தின்மீது வீசி எறிந்து அந்தப் பாழினை விளைவித்தனர். மேலே குறிப்பிட்ட கிரியை மிகவும் சிக்கலானது; தானாக நடைபெறக்கூடியது. யு-285 லிருந்து வெளிவரும் பொது இயல் மின்னிகள் யு-238 லிருந்து புளுட்டோனியத்தை உற்பத்திசெய்தன. இவ்வாறு உற்பத்தியாகும் புளுட்டோனியம் அணு உலையில் திரளுகின்றது. இந்தப் புளுட்டோனியம் எளிதில் பக்குவிடக் கூடியது. எனவே, யு-235 ஐப் போலவே இதுவும் பேரளவில் பயன் படும் அணு எரியையாகின்றது.

இவ்வாறே யு-235 லிருந்து வெளிப்படும் பொது இயல் மின்னிகளைக் கொண்டு இயற்கையில் கிடைக்கும் தோரியம்26 என்ற தனிமத்தை யு-238 ஆக மாற்றலாம். யு-288 பக்குவிடும் தன்மையது (படம்-12). தமிழ் நாட்டின் எல்லையான குமரிக் கடற்கரையில் காணப்பெறும் மோனசைட்27 என்னும் ஒருவகை மணலில் கதிரியக்கப் பண்பு கொண்ட தோரியம் என்ற தனிமம் உள்ளது. இது பலவகைகளிலும் யுரேனியத்தை யொத்தது. தோரியத்தை யுரேனியத்திற்குப் பதிலாக உபயோகிக்கலாம் என்று அறிந்தவுடன் இந்த மண-


24 தோரியம் - thorium. 25 மோனசைட் - monazite.