பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அணுவின் ஆக்கம்


அடுக்கு செயற்படத் தொடங்கியபின் அதை நெருங்க முடியாது. ஏனெனில், அதிலிருந்து வெளியாகும் கதிரியக்கக் கதிர்களும் பொது இயல் மின்னிகளும் கொல்லும் தன்மை வாய்ந்தவை. எனவே, தடித்த காரீயச் சுவர்களும் பல அடிகள் பருமனுள்ள (காங்கிரீட்டு) கப்பிச் சுவர்களும்29 அடுக்கிற்குக் காப்புறைகளாக அமைகின்றன. அடுக்கில் நிகழும் விளைவினைக் கட்டுப்படுத்துவதும், புளுட்டோனியம் தயாரானதும் அதை வெளியே எடுப்பதும், மீண்டும் யுரேனியத்தை அடுக்கில் இடுவதும் பொறிகளாலேயே செய்யப் பெறுகின்றன.

அடுக்கிலுள்ள யுரேனியம் பிளவுறுங்கால் ஏராளமான ஆற்றல் வெளிப்படுகிறது என்றும், அவ்வெப்பம் குளிர் நீரினல் தணிக்கப்பெறுகிறது என்றும் மேலே கண்டோம். அமெரிக்காவில் ஹான்போர்டு30 என்னுமிடத்தில் அமைக்கப் பெற்றுள்ள யுரேனிய அடுக்கைக் குளிர்விக்க அண்மையிலிருந்த கொலம்பியா என்னும் ஆற்று நீர் பயன்பட்டது. இதற்கு ஒரு நாளைக்குத் தேவையாகும் நீர் சென்னமா நகரில் நாளொன்றுக்குச் செலவாகும் நீருக்குச் சமமாகும் என்று சொல்லலாம். வெப்பத்தின் அளவுதான் எவ்வளவு என்று. தெரிகிறதா? இவ்வாறு ஒரு நாளில் ஆற்று நீரில் கரைந்து விளையும் வெப்ப ஆற்றலே மின்னுற்றலாக மாற்றினால், அவ்வாற்றல் நம் வீட்டில் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு விளக்கெரிக்கப் போதுமானது அடுக்கில் பல பகுதிகளில் பாய்ந்து வெளிவரும் நீர் கதிரியக்கத் தன்மை வாய்ந்தது. அதை அப்படியே ஆற்று நீரில் கலந்தால், அந் நீரை உபயோகிப் போர் தீங்கடைவர். ஆகவே, அந்நீரைப் பெரிய குளங்களில் தேக்கி வைத்திருந்து, அது கதிரியக்கத்தை இழந்த பிறகு, ஆற்றில் கலக்கச் செய்கின்றனர்.

அணுவாற்றலின் மர்மம் : அணுத்திரளை சிதையும் பொழுது கரி எரிந்துவருவதற்கும் அணுவே சிதைந்து ஆற்றலாகப் பிறப்பதற்கும் உள்ள வேற்றுமையைத் தெளி-


29 காங்கிரீட்டு சுவர்களும் - concrete walls 30 ஹான்போர்டு - Hanford.