பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்நிலை விளைவும்

75


வாக அறிந்துகொண்டால்தான் அணுகுண்டின் அரக்க ஆற்றலின் மர்மத்தை அறிந்துகொள்ள முடியும். ஒரு கிராம் எடையுள்ள கரியில் கிடைக்கும் அணுத்திரளைகள் சிதைந்து எரிந்தால் எட்டாயிரம் கனலி சூடு எழும். இரண்டு கிராம் நேர் இயல் மின்னியும் இரண்டு கிராம் பொது இயல் மின்னியும் சேர்ந்து நான்கு கிராம் பரிதியமாக அமையும்பொழுது பொருண்மை முன்னிருந்ததினும் குறைந்து விளங்குகிறது என்பது நமக்குத் தெரியும். இங்குக் குறையும் பொருண்மை தான் ஆற்றலாக மாறுகிறது. 0.032 என்ற அணு எடை 64,000 கோடி கனலியாகும்; அஃதாவது, ஒரு கிராமுக்கு 18,000 கோடி கனலியாகும். எனவே, அணுத்திரளையின் சிதைவினல் கரி எரியும்பொழுது ஏற்படும் ஆற்றலைவிட அணுவே சிதையும்பொழுது உண்டாகும் ஆற்றல் 2 கோடி மடங்கு மிகுதியாகும் என்பது தெரிகிறது. இந்த வேற்று மைக்குக் காரணம் என்ன?

கரியைப்போன்ற ஒரு பொருள் காற்றில் எரியும்பொழுது அதன் அணுக்களும் காற்றிலுள்ள உயிரிய அணுக்களும் ஒன்று சேர்கின்றன. அப்பொழுது புதுப் பொருள் ஒன்று தோன்றுகிறது; இவ்விளைவில் வெப்பமாகவோ, ஒளியாகவோ ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த வேதியல் கிரியையில் அணுக்களின் புறத்தமைப்பிலுள்ள மின்னிகளில் மட்டிலும் மாற்றம் நிகழ்கிறதேயன்றி, அவற்றின் உட்கருக்களில் யாதொரு மாற்றமும் நேரிடுவதில்லை. இதனுல் வெளிவரும் ஆற்றலும் அவ்வளவு அதிகமாக இருப்பதில்லை. இவ்வாறு ஒரு பொருள் சீராக எரியும் பொழுது ஆற்றல் சிறிது சிறிதாக வெளிவருகிறது; அதனால் அவ்வாற்றலே நமக்கு வேண்டியவாறு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இதே விளைவு வெடிமருந்தைப் போன்ற ஒரு பொருளில் நிகழுங்கால், வெடிமருந்து இமைப்பொழுதில் உயிரியத்துடன் சேர்ந்து ஒரே சமயத்தில் பேராற்றலை வெளிவிடுகிறது ; ஆற்றலும் சேதம் விளைவிக்கும் திறமையைப் பெறுகின்றது. ஆனால், அணுக்குண்டு வெடிக்கும் பொழுது நேரிடும் விளைவு வேறு வகையானது. இதில்