பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அணுவின் ஆக்கம்


அணுவின் உட்கருக்களில் மாற்றம் உண்டாகிறது. இம்மாற் நம்முதலாவதைவிட அடிப்படையானது. இதனுல்கனவிலும் கருதமுடியாத ஆற்றலை நொடிப்பொழுதில் வெளிவிடுகிறது. ஒரு இராத்தல் யுரேனியத்தைப் பிளப்பதால் வெளியாகும் ஆற்றல் வலிமை பொருந்திய டி. என். டி. என்னும் வெடி மருந்தில் 10,000 டன்கள் வெடிப்பதற்குச் சமமாக உள்ளது என்று கணக்கிட்டுக் கூறுகின்றனர் அறிவியலறிஞர்கள்.

மறலிக் கதிர்கள் : அனுச் சிதைவிலிருந்து வெளிப்படும் கதிர்கள் உயிருக்கே உலை வைக்கக்கூடிய மறலிக்கதிர்களாகும். இக்கதிர்களே ஜே. ஜே. தாம்சன்22 என்பார் ஆல்பாகதிர்கள் என்றும், பீட்டா-கதிர்கள் என்றும், காமா-கதிர்கள் என்றும் பாகுபடுத்திக் காட்டியுள்ளார். இக்கதிர்களின் தன்மைகளைப்பற்றிய முழு விவரங்களேயும் பின்னர்க் காண்போம்.

அணுவாற்றல் தொழிலகங்களில் வேலை செய்வோரும் கதிரியக்க ஓரிடத்தான்களைப் பயன்படுத்திப் பணியாற்று வோரும் கதிர்வீசலினுல் தீங்குறாதபடி பாதுகாக்கும் முறைகளும் தோன்றியுள்ளன. உடல்நல பெளதிகம்23 என்ற புதிய துறை இதற்காகவே தோன்றியுள்ளது. இத்துறையில் பணியாற்றும் உடல்நல பெளதிக அறிஞர் தக்க பாதுகாப் புடன் பணியாற்ற ஏற்பாடுகள் செய்தும், அணுச்சிதைவினால் உண்டாகும் கிரணங்கள் ஊழியர்கள்மீது விழாதபடி தடுத்தும், அவசியமானபொழுது தக்க எச்சரிக்கை செய் தும் ஊழியர்களைக் காக்கிறார், எந்த அளவுக்கு அதிகமான கதிரியக்கத்தில் சஞ்சரிக்கக் கூடாது என்று வரம்புகட்டி ஊழியர்களுக்கு உணர்த்துகிருர், ஊழியர்கள் கதிரியக்கத்தை அலட்சியம் செய்யாது நடந்துகொண்டால், கதிரியக்கத்தால் தோன்றும் மறலிக் கதிர்களுக்குச் சிறிதும் அஞ்சவேண்டியதில்லை.


31 ஜே. ஜே. தாம்சன் - Thomson. 32 உடல்நல பௌதீகம் - Health physics.