பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

அணுவின் ஆக்கம்


சாதாரண தொழிற்சாலைகளிலுள்ள கழிவுப்பொருள்களை பயனுள்ளவைகளாக இருந்தால் பயன்படுத்துகின்றோம். இல்லையேல், அவற்றைக் குழிதோண்டிப் புதைத்துவிடுகிரறோம்; அல்லது, கடலில் எறிந்துவிடுகிரறோம். யுரேனியத் தொழிற்சாலைக் கழிவுப் பொருள்களே அங்ஙனம் செய்ய முடியாது. அப்பொருள்கள் யாவும் கதிரியக்கமுள்ளவையாக இருக்கும். ஆகையால் அவற்றைத் தீங்கின்றி அழிக்கும் முறைகளைக் கண்டறிந்தாக வேண்டும். ஆனால், உலகெங்கும் யுரேனியத் தொழிற்சாலைகள் தோன்றிய பிறகு இக்கழிவுப்பொருள்களை அழிப்பது மிக முக்கியமான பெரும் பிரச்சினையாகிவிடும்.

யுரேனிய இயந்திரங்கள் : யுரேனியம் எதிர்காலத்தில் இயந்திரங்களில் எரியையாகப் பயன்படும் என்று உறுதியாக நம்பலாம். ஒர் இராத்தல் யுரேனியத்திலிருந்தோ புளுட்டோனியத்திலிருந்தோ கிடைக்கும் ஆற்றல் 1400 டன் நிலக்கரியையோ 900 டன் மண்ணெண்ணெயையோ எரிப்பதால் கிடைக்கும் ஆற்றலுக்குச் சமம். தற்காலத்தில் யுரேனியத்தின் மொத்த நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கே ஆற்றலாகிறது. அணுவாற்றலைப் பயன் படுத்தும் முறைகளும் சீரமைந்து யுரேனியமும் மலிவாகக் கிடைக்குமானுல் எதிர்காலத்தில் தொழில் துறையில் பெரிய தொரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

யுரேனிய இயந்திரங்கள் இயங்கும் நிலையத்தை அமைக்கவும் அதிகச் செலவு ஏற்படுகிறது. அண்மையில் அணுவாற்றல் நிலைய அமைப்பின் செலவை மதிப்பிட்ட குழுவொன்று இப்பிரச்சினையை ஆராய்ந்து, வேறு நிலையங்களே அமைப்பதைவிட யுரேனிய ஆற்றல் நிலைய அமைப்புக்கு 25 சத விகிதம் அதிகமாக ஆரம்பச் செலவாகும் என்று மதிப்பிட்டிருக்கின்றது. கரி, எண்ணெய் முதலிய எரியைகள் கிடைக்க வசதியில்லாத இடங்களில் யுரேனிய ஆற்றல் நிலையங்களே அமைக்கலாம். இத்துறையில் தீவிர அமான ஆராய்ச்சி தொடங்கியுள்ளது. விரைவில் குறைந்த செலவில் நிலையங்களே அமைக்கவும் அணுவாற்றலே. மலிவாகப் பெறவும் வழிவகைகள் கண்டறியப் பெறலாம்.