பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு எரியைகள்

61


அஃதாவது, முப்பது இலட்சத்தில் ஒரு பகுதிதான் ரேடியம் கிடைக்கிறது. இன்னொரு விதமாகக் கூறின், மூன்று டன் யுரேனியத்திலிருந்து ஒரு கிராம் ரேடியத்தைப் பிரித்தெடுக்கலாம். அந்தக் காலத்தில் ஒரு கிராம் ரேடியத்தின் விலே நூறு டாலராக6 (அமெரிக்கன்) இருந்தது. யுரேனியம் அதிக விலையுள்ளதாக இராவிட்டாலும் உயர்தரமுள்ள யுரேனியக் கணிப் பொருள்களின் விலை அதிகமாகவே இருந்தது.

இந்தக் காரணத்தால் பல இடங்களில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் யுரேனியப் படிவுகளைச் சோதித்துக் கண்டறிந்தனர். யுரேனியப் படிவுகளைக் காணும் முயற்சியும் அதிகரிக்கப்பட்டது. யுரேனியம் விலையுயர்ந்த பொருள் என்ற நாள் வரும் வரையில் இம்முயற்சி விரிந்த நிலையில் செயற்படுவதற்குத் தயாராக இருந்தது. இதுகாறும் கண்டறியப்பெற்ற படிவுகளில் மூன்றினேச் சிறப்புடையனவாகக் கூறலாம். இந்த மூன்றிலும் கிடைக்கும் கணிப் பொருள் ‘பிச் பிலெண்டி’7 எனப்படுவது, இக்கணிப் பொருளில் யுரேனியம் உயிரியத்துடன் கலந்து கருநிற ஆக்ஸைடாகக்8 காணப்படுகிறது. இதில் யுரேனியத்தின் சதவிகிதம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. முதற்படிவு செக்கோசுலோவாக்கியாவில்9 பொகிமியன் பரப்பி10லுள்ள ஜோகிம்ஸ்: தால்11 என்ற இடத்திலுள்ள பண்டைய சுரங்கங்களில் கண்டது. இச்சுரங்கங்களில் 800 ஆண்டுகளாக வேலை நடந்துகொண்டே இருக்கிறது. முதலில் வெள்ளியத்தைப்12 பிரித்தெடுப்பதற்கும் அதன்பிறகு வெள்ளி, கோபால்ட்டு13, நிக்கல்14 ஆகியவற்றை முறையே கண்டறியவும் வேலை தொடர்ந்து நடைபெற்றது. இறுதியாக, 1898-ல் ரேடியத்தைக் கண்டறிந்த பிறகு குயூரி அம்மையார் யுரேனியத்திற்காக


6ஒரு டாலர் = 4 1/2 ரூபாய்க்குச் சமம் (சுமாராக). 7 பிச் பிலெண்டி - pichblende. 8 ஆக்ஸைடு -oxide. 9 செக்கோசுலோவாக்கியா-Czechoslovakia. 10 பொகிமியன் பரப்பு-Bohemian area. 10 வெள்ளியம்-tin. 13 கோபால்ட்டு-cobait. 14 நிக்கல்-nicke1.