பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு எரியைகள் 3&

அவற்றைச் சோதித்ததில் ஒரு டன் கணிப்பொருளுக்கு இரண்டு இராத்தல்கள் வீதம் யுரேனியம் கிடைத்தது. இவ்வாறு கிடைத்த கணிப்பொருள்கள் கணிசமாகவே: இருந்தன என்றே சொல்லலாம். இத்தகைய படிவுகள் ஐக்கிய நாடுகளின் பிற்பகுதிகளிலும் உலகின் பல்வேறு: பகுதிகளிலும் கண்டறியப் பெற்றுள்ளன. இவற்றுள் மிகவும் முக்கியமானவை இரண்டு. ஒன்று, ஆஸ்திரேலியாவின் வட பகுதியிலுள்ள ரம் காட்டில்" இருப்பது. மற்ருென்று, தென் ஆஸ்திரேலியாவிலுள்ள ரேடியம் குன்று" என்ற இடத்தி லுள்ளது.

யுரேனியத்தின் மூன்ருவது மூலம் வேறு பொருள்களைத் தேடுவதற்காக பிளக்கப்பெற்று நொறுக்கப்பெற்ற பாதை களிலிருந்து கிடைப்பதாகும். இவ்வாறு செய்வதில் ஆகும் செலவுகளே அப்பொருள்கள் ஏற்கின்றன. அவற்றில் சிறி தளவு உபயோகப்படும் யுரேனியம் கிடைக்கின்றது. எனவே, அதில் யுரேனியம் ஓர் உடன்விளைவுப் பொருளாகவே" கிடைக்கின்றது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள தங்கச் சுரங்கங் களையும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென் கிழக்குப் பகுதி யிலுள்ள பாஸ்பேட் - பாறைகள் வெட்டியெடுக்கப்பெற்ற இடங்களையும் இதற்கு எடுத்துக் காட்டுகளாகக் கொள்ள லாம். இந்த இரண்டு இடங்களிலுமுள்ள பாறைகளில் கிடைக்கும் யுரேனியத்தின் அளவு மிகக்குறைவே ; ஆயி னும், அதனைப் பிரித்தெடுக்கும் செலவுகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்நிலேயில் அவை இரண்டும் முக்கியமான அளவு யுரேனியத்தை உற்பத்தி செய்கின்றன என்றே கொள்ளவேண்டும்.

நாளடைவில் யுரேனியக் கணிப்பொருள்கள் அதிகமாக கண்டறியப் பெறலாம். காரணம், அது பூமியின் மேலோட் டில் மிக விரிந்த நிலையில் வினியோகப்பட்டுக் கிடக்கும்

23 gih GrG – Rum Jungle. “GJIą-luth Gśšrp - Radium. Hill. ** gr. Gör sist8sIrsați: Gtsir(Hsir - by product. * Gingsor(S - crust. * sosof (3 ursi'il IL-G - distributed.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/99&oldid=599425" இலிருந்து மீள்விக்கப்பட்டது