அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம் 1953-ம் ஆண்டு சூலைத் திங்கள் 14-ம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் மும்முனைப் போராட்டத்தில் குதித் தது. கழகத்தின் ஒப்பற்ற ஒரு பெரும் தலைவராகவும், சிறந்த வழிகாட்டியாசவும் திகழ்ந்த போறிஞர் அண்ணா அவர்களின் அறப்போர்க் கட்டளைகளைத் தாங்கிக் கொண்டு கழகத்தின் கட்டிளங்காளையர் ஆயிரமாயிரமாக அணி அணியாக ஆங்காங்கு திரண்டனர். கழகத்தின் முன் னணியினர் ஆங்காங்கு அறப்போர்ப்படைகளுக்குத்தலைமை தாங்கினர். அந்த ஒரு நாளிலே மட்டும் தமிழகம் முழு வதிலும் பதினையாயிரத்திற்கு மேற்பட்ட கழக வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். சூலைத் திங்கள் 14-ஆம் நாள் தான் பிரஞ்சுப் புரட்சி வெற்றிகொண்ட நாளாகும்! அந்த நாள்தான் பிரெஞ்சுப் புரட்சிப் படை வெகுண்டெழுந்து வீறுகொண்டு பாய்ந்து கொடுஞ்சிறையாக விளங்கிய பாஸ்டிலி சிறையைத் தகர்த்து நொறுக்கிய நாள்? - ஆணவ அரசும், . - - ஆதிக்க அதிகாரிகளும், சர்வாதிகார மன்னனும், யதேச்சாதிகார பிரபுக்களும் விரட்டியடிக்கப்பட்ட நாள்!- அடிமை விலங்கு ஒடிக்கப்பட்டு சமத்துவம் - சகோதரத்துவம் விடுதலை* என்ற முழக்கம் வெற்றிக் களிகொண்ட நாள்! பிரான்சு நாட்டில் வல்லரசு வீழந்து நல்லரக ஏற்படக் காரண்மாக விளங்கிய நாள்! -1 -
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
