பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதும் ஆற்றல் உலகின் சிறந்த எழுத்தாளர்களை எடுத்துக்கொண் டால், ஒவ்வொருவரும் தம் சிறந்த எழுத்தோவியங்களை எழுதுவதற்குத் தமக்கென் று சில சூழ்நிலைகளையும் போக்குகளையும் ஏற்படுத்திக் கொள்பவர்களாகவே இருந்துவரக் காண்கிறோம். சிறந்த எழுத்தாளர்களில் சிலர் குப்புறப் படுத்துக் கொண்டு எழுதும் பழக்கத்தையும், வேறு சிலர் சாய்வு நாற்சாலியில் சாய்ந்து கொண்டு எழுதும் பழக்கத்தையும் மற்றுஞ் சிலர் அட்டாணிக்கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்த நிலையில் தொடைமீது தொடைமீது ஏட்டை வைத்துக் கொண்டு எழுதும் வழக்கத்தையும், இன்னுஞ் சிலர் நாற் காலியில் உட்கார்ந்துகொண்டு மேசையில் ஏட்டை வைத்துக்கொண்டு எழுதும் பழக்கத்தையும், வேறு சிலர் கீழே உட்கார்ந்துகொண்டு சிறிய சாய்வு மேசையில் ஏட்டை வைத்துக்கொண்டு எழுதும் பழக்கத்தையும் பொதுவாசக் கொண்டிருக்கக் காண்கிறோம். அறிஞர் அண்ணா அவர்கள் பல்வேறு நிலைகளிலும் இருந்து கொண்டு எழுதக் கூடியவர் என்றாலும், உட்கார்ந்து கொண்டு காலினமேல் காலை மடக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டு ஒரு புத்கத்தையோ அல்லது அட்டையையோ தொடைமீது வைத்துக்கொண்டு, அதன் மீது தாள்களை