பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அடுக்கி வைத்துக்கொண்டு எழுதும் பழக்கத்தைத்தான் அவர்களிடம் எப்பொழுதும் பொதுவாகக் காணமுடியும். பெலரும் எழுத ஆரம்பித்துவிட்டும், பிறகு சிந்தித்துச் சிந்தித்து மெல்ல விட்டுவிட்டு எழுதுவார்கள். ஆனால் அறிஞர் அண்ணா அவர்களோ எழுதுவதற்கு முன்னால் சிந்திக்க வேண்டியதெல்லாம் சிந்தித்துவிட்டு, எழுதலாம் என்ற எண்ணம் பிறந்தவுடன் மடமடவென்று வரைந்து தள்ளிகொண்டே இருப்பார்கள்; பக்கங்கள் புரண்டு கொண்டே இருக்கும்; பெரும்பாலும் அடித்தல் திருத்தல் இருக்காது யிக விரைவாகப் பேனா நகர்ந்து கொண்டே யிருக்கும்.

. னால் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதென்றால் சிலருக்கு நாட்கள் கணக்கில் திங்கள்கள் கணக்கில் ஆகும். அறிஞர் அண்ணா அவர்களுக்கு எல்லாம் மணிகள் கணக் கிலேயேமுடிந்துவிடும். ஐந்துமணி நேரம், ஆறு மணி நேரம், எட்டு மணி நேரம் என்ற கால அளவிற்குள ஒரேயடியாக உட்கார்ந்து கட்டுரைகளோ, நூல்களோ, எழுதித் தள்ளி விடுவார்கள். பெருமபாலும் இரவு 11 மணி அல்லது 12 மணிக்கு எழுதத் தொடங்கிக் காலை 6 அல்லது 7 மணி வரையில், விடாமல் எழுத நினைக்கும் எல்லாவற்றையும் எழுதி முடித்துவிடுவார்கள். எழுதுவதைப் போலவே படிக்க எண்ணும் நூலை எடுத்து ஒரு சில மணி நேரத்தில் படித்து முடித்துவீடுவார்கள். அரை குறையாகப் படிப்பதோ விட்டுவிட்டுப் படிப்பதோ அறிஞர் அண்ணா அவர்களிடம் காண முடியாத பண்டாகும். - அறிஞர் அண்ணா அவர்களுக்கே உரித்தான அழகான -சீரிய - உயர்ந்த - எளிய-இனிய - பொருள் செறிந்த நயம் சிறந்த - எதுகை மோனை நிறைந்த தடை, மிக்க எளிதான முறையில், மிக்ஈ விரைவாகத், தொடர்ந்தாற் போல், துவளாமல், தொங்காமல் அறிஞர் அண்ணா அவர் களின் எழுதுகோலினின்றும் வெளிப்படுது போவறு வேறு யாரிடத்திலும அவ்வளவு அருமையாகக் காணமுடியாது. மன்றம், நாள்: 15-10-55,