பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொழிவு ஆற்றும் ஆற்றல் கேட்பார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாஞ் சொல்" என்ற திருக்குறளின் இலக் கணத்திற்கு ஒரு தலைசிறந்த சீரிய இலக்கியம் அண்ணா ஆவார்கள். பல்லாயிரக்கணக்கான "அண்ணா என்ற சொல் இளைஞர்களாலும், மாணவர்களாலும், பொது மக்களா லும், அன்போடும் அருமையோடும் ஆர்வத்தோடும் குறிப்பிடப்படும் அழைக்கப்படும் சொல்லாக இன்று இருந்து வருகிறது. அந்த அளவுக்கு அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. தேன்துளியை விரும்பி வந்து எறும்புகளின் கூட்டம் எப்படி மொய்த்துக் கிடக்குமோ, அப்படி அறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவைக் கேட்க தாலா பக்கங்களிலிருந்தும் மக்கள் கூட்டங் கூட்டமாகத் திரண்டு வந்து மொய்த்துக் கிடப்பதை எங்கும் காணலாம். தேனைச் சுவைக்கப் பலர்க்கும் எப்படி நா ஊறுமோ, அது போலவே அறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழி வைக் கேட்கப் பலர்க்கும் செவியூறுவதைப் பார்க்கிறோம். பலகாலமாகப் பல மேடைகளில் பேசிக்கொண்டு வந்தாலும் பலர்க்குக் கவர்ச்சிகரமாகப் பேசும் ஆற்றல் வருவதில்லை. ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள்