பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 102 பேச்சு எடுத்த எடுப்பிலேயே சிறந்த சொற்பொழிவாளர் என் பயர் எடுத்துவிட்டார்கள். அவர் பச்சையப்பன் கல்லூரியில் 'கலைமுதியர்' (ஆனர்சு) வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் முதன் முதல் மேடையில் ஏறினார்கள்; அதுவும் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டி மேடையில்தான் முதன் முதல் ஏறினார்கள். என்றால், அவரது பேசும் ஆற்றல் எந்த அளவுக்கு அவரோடு ரண்டறத் தோய்ந்து கிடக்கும் இயற்கைப் பண்பாக மிளிருகிறது என்பதை உணரலாம். பேச காண்ட எடுத்துக்கொண்ட பொருளை, எடுத்துக். பொருளிலேயே நின்று, நிரல்பட எடுத்து மொழிந்து, ஐயந்திரிபற விளக்கிடும் ஆற்றலும், எதுகை மோணை போன்ற அணி அழகோடு கூடிய அழகிய சொற் களை இனிய, ஓசையில் எடுத்தியம்பும் பண்பும், கேட் போர் உள்ளத்தில் நகை, வீரம், இரக்கம், அழுகை போன்ற ஒன்பது வகைச் சுவைகளையும் கிளர்ந்திடும் தன்மையும், இடையிடையே உவமைகளையும், கதைகளையும் கோர்த் திடும் அழகும், ஏற்றத்தாழ்வான குரவோடு மோதாமல் முட்டாமல் - தயங்காமல்--தள்ளாடாமல்-தட்டுத் தடுமா றாமல் விரைவு படாமல் ஆற்றொழுக்கென சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடும் பான்மையும். காரண காரிய விளக்கங்காட்டிவா திடும்சிறப்பும், எளிமை - அருமை- மேன்மை - - கண்ணியம் - நாகரிகம் ஆகிய அரிய பண்புகளைக் கடைப் பிடிக்கும் பாங்கும் அறிஞர் அண்ணா அவர்களிடத் தில் ஒன்று திரண்டு காணப்படுவது போல் வேறு யாரிடத்தி லும் காணமுடியாது. அறிஞர் அண்ணா அவர்களின் குர லோசை யாழ் - குழல் - நாயனம் - மகுடி ஆகியவற்றின் - - - ஓசைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தாற் போன்ற