பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையாடும் ஆற்றல் . இருவரோ, மூவரோ அல்லது பலரோ ஓரிடத்தில் கூடி யிருக்கும்போது, கூடியிருப்போரின் கவனத்தை ஈர்க்கும் உரையாடல்கள் நடத்தி, கூடியிருப்போரை மகிழ்வித்துப் பொழுதுபோவதே தெரியாமற் செய்யும் அரும் ஆற்றல் மிகச் சிலரிடத்தே மட்டும் அமைந்திருக்கக் காண்கிறோம். அப்படிப்பட்ட பண்பும், ஆற்றலும் எவ்வளவுதான் முயன்று பார்த்தாலும் பலர்க்கு வருவதேயில்லை. அறிஞர் அண்ணா அவர்கள் இயல்பாகவே மிகச்சிறந்த உரையாடற் காரர் என்பதை அவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் நன்கு அறிவார்கள். சிலர் எங்கும். எப்பொழுதும், எவரோடு கூடியிருக்கும் போது, சிறந்த உரையாடற்காரர்களாகக் காட்சியளிப் பார்கள். ஆனால், அறிஞர் அண்ணா அவர்களோ, குறிப்பிட்ட சில நெருங்கிய நண்பர்களுடன் கூடியிருந்து உரையாடுவதைத்தான் எப்பொழுதும் விரும்புவார்கள். பலரோடு கூடியிருக்கும்படியான நிலைமை ஏற்பட்டாலும், குறிப்பிட்ட சில நெருங்கிய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு தனிமையாக இடத்திற்குச் சென்று இருந்து உரையாடி மகிழ்வார்கள். அறிஞர் அண்ணான் உரையாடல் கேட்கக் கேட்க இனிமையாகவே இருக்கும். எவ்வளவு நேரமானாலும், மணிக்கணக்கில், நாட்கணக்கில் ஆனாலும், தெவிட்டவே