105 தெவிட்டாது. அண்ணாவின் உரையாடல் கேலி கிண்ட நிறைந்ததால், நகைச்சுவை மிக்கதாய்ச் சிறிதளவு பொழுது போக்கானதாகவும்,பெரிதளவு பயனறிவு பயப்பதாகவும் விளங்கும். அண்ணாவோடு கூட இருந்து உரையாடிக் கொண் டிருக்கும்போது பொழுது போவதே தெரியாது; பசி நேரம் தவறிய போகும்; கடமைகளின் நேரங்கள் மாறிப் போகும். முறைப்படி செய்யனேண்டிய அன்றாடக் கடமைகளைப் பற்றிக் கவலைப்படாமல், கொண்டே இருப்பார்கள். உரையாடிக் அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பெரும்பாலும் பகல் நேரம் இரவாகவும். இரவு நேரம் பகவாகவும் மாறிவிடும். அதாவது இரவிலே நீண்ட நேரம் விழித்துக் கொண்டும், பகலிலே நீண்ட நேரம் உறங்கிக் கொண்டும் இருப்பார்கள். நண்பர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு இரவு நேரத்தில் நீண்டநேரம் உரையாடுவார்கள். சில வேளைகளில் பொழுதுகூட விடிந்துவிடும். கூடியிருக்கும் நண்பர்கள், உறக்கம் வரவா, அப்படி அப்படியே இருந்த இடத்திலேயே படுத்து உறங்கி விடுவார்கள். கடைசி ஒரு நண்பர் விழித்துக்கொண்டு இருக்கும் வரையில், அண்ணா அவர்கள் உரையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த நண்பரும் அவரையறியாமலேயே உறங்கத் தொடங்கிவிடுவாரே யாவால், அண்ணா அவர்கள் வேறு வழியின்றி கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயலுவார்கள்; அப்பொழுதும் அவருக்குத் தூக்கம் வருவதில்லை. பொழுது விடிய விடியத் தான் அண்ணா அவர்களுக்குத் தூக்கமும் மெல்ல வந்து காண்டிருக்கும். பேசும் ஆற்றல், எழுதும் ஆற்றலைப் போலவே உரை யாடும் ஆற்றலிலும் அறிஞர் அண்ணா அவர்கள் தலை சிறந்து விளங்குபவர் ஆவார்கள். மன்றம், நாள்: 15-11-55 -1--
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/106
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
