பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த நடிகர் அறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த பேச்சாளர்- எழுத்தாளர்-உரையாடற்காரர் என்று மட்டும் பேர் பெற்றவரல்லர்; அவர் சிறந்த நடிகர் என்றும் பேர்பெற்றவ ராவார். . . அறிஞர் அண்ணா அவர்களின் நடிப்பைக் காணும் வாய்ப்பைப் பெற்ற நடிகர்களான என். எஸ். கிருஷ்ணன், எம்.கே.தியாகராச பாகவதர், எம்.எம். தண்டபாணி மதசிகர், டி.கே.சண்முகம், எம்.ஆர்.ராதா, கே. சாரங்க பாணி, கே.ஆர்.இராமசாமி, எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ். எஸ். இராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி போன்ற வர்களும், பெரியார் எவ. இராமசாமி மணவாள ராமானுசம், டி. செங்கல்வராயன் போன்றவர்களும் பிறரும் பலப்படப் பாராட்டிப் போற்றியுள்ளார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் இளம் வயதிலிருந்தே நாடகத்திலும், நடிப்பிலும் மிக்க அக்கரை கொண்டு, அவற்றிலே பெரு விருப்புச் செலுத்தி வந்தவராவார். அவர் சிறுவயதில் உடன் பழகும் பள்ளிச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு, மாட்டுக் கொட்டிலில் நாடகம் நடத்து வதுண்டு. எந்தத் தெருக் கூத்து ஆனாலும், எந்த நாடகம் ஆனாலும் அவற்றைப் பார்க்க அவர் தவறுவதேயில்லை. கை கால்களை ஆட்டி, ஓடியாடிக் குதித்து நடிக்கும் பழக்கத்தை அண்ணா அவர்களிடம் காண முடியாது.