பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா ஆச்சாரியார் அறிமுகம் இருபதாண்டு காலத்திற்கு முன்பு அன்பர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களு நம் ஒருவரையொருவர் நேர்முகமாகக் கண்டு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. சென்னை ஓய்.எம்.சி.ஏ. விவாத அரங்கு ஒன்றிறகு அன்பர் ஆச்சாரியார் தலைமை வகிக்க, அறிஞர் அண்ணா அவர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்கள். அதுதான இருவர்க் கிடையேயும் ஏற்பட்ட முதல் அறிமுகம். என்றாலும், அந்த அறிமுகம் அன்பர் ஆச்சாரியாரின் நீடித்த நினைவில் பதிநதிருக்கத் தக்கதாக அமையவில்லை. . அண்மையில், அதாவது 28-1-56இல், அறிஞர் அண்ணா அவர்களும், அன்பர் ஆச்சாரியார் அவர்களும் ஒருவரை யொருவர் நேர்முகமாகக் கண்டு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த அறிமுகம் நினைவில் இருத்தத்தக்க அறிமுகமாக அமைந்தது என்னலாம். சென்னை தமிழ்க்கலை மன்றத்தைச் சார்ந்த தோழர் சுப்பையா அவர்களின் 'தமிழகம்' மாளிகையில், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சி மொழிபற்றிய முடிவு எடுக்க, கூடிய சர்வ கட்சிகளின் வட்டமேசை மாநாட்டில் ஆச்சாரி யாரும், அண்ணாவும் கலந்து கொண்டார்கள். மாநாடு முடியும்வரையில் அண்ணா அவர்களை ஆச்சாரியார்