10 வரலாற்றுச் சிறப்பு பெற்று விளங்கிய அந்த சூலை 14-ஆம் நாளைத் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் மும் ம் முனைப் போராட்டத்திற்கு உரியதாகத் தேர்ந்தெடுத் தார்கள். ஒரே நாளில் மூன்று முனைகளில் போராட்டங்கள் நடத்திக் காட்டப் பட்டன. ஒரு முனை அப்பொழுது முதலமைச்சராக இருந்த ஆச்சாரியார் அலுவலகத்திற்கு முன்னால் நடைபெற்ற குலக்கல்வி எதிர்ப்பின் சார்பான மறியல் போராட்டம் ஆகும்; மற்றொரு முனை தி.மு. கழகத்தின் உரிமை வேட்சையை 'முட்டாள் தனமானது என்று இழித்துக்கூறிய பண்டித நேருவுக்குப் பாடம் கற்பிப் பதற்காகவும், கழகத்தின் வலிமையை உணர்த்துவதற் காசவும் மேற்கொள்ளப்பட்ட இரயில் நிறுத்தப் போராட் டம் ஆகும்; மூன்றாவது முனை வடநாட்டான் ஆதிக் கத்தை நிலைநாட்டும் வகையில் வடநாட்டான் பெயரைத் தாங்கி நின்ற 'டால்மியாபுரம் - என்ற புகைவண்டி நிலையத்தின் பெயரைக் 'கல்லக்குடி என்ற உரிய தமிழ்ப் பெயராக மாற்றி அமைக்கும் போராட்டமாகும். - போராட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே, போராட்டத்தை தூண்டிவிட்டோம் என்றகுற்றம் கமத்தப்பட்டு அறிஞர் அண்ணா அவர்களும், நானும். தோழர் என்.வி.நடராசன் அவர்களும், தோழர் கே.ஏ. மதியழகன் அவர்களும்,தோழர் சம்பத்து அவர்களும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட் டோம். நாங்கள் ஐவரும் சிறைக்குள்ளே அடைபட்டுக் கிடந்த நேரத்தில்தான் கழக முன்னணியினரும்; கழக வீரர்களும் ஊக்கத்தோடும், உள்ளக் கிளர்ச்சியோடும் மூன்று முனைகளிலும் நின்று அறப்போர் புரிந்தார்கள். மாநில முதல் நடுவர் நீதிமன்றத்தில் எங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/11
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
