109 அறிந்துகொள்ளவில்லை. யாரோ ஒருவர் என்ற முறையில் தான் அவருடன் உரையாடல் நிகழ்த்தினார். மாநாடு முடிந்து கலைந்து போகும்போது, நண்பா ம.பொ.சிவஞானம் அவர்கள், அண்ணா அவர்களையும், ரா. நெடுஞ்செழியன் அவர்களையும் ஆச்சாரியார் அருகே அழைத்துச் சென்று அறிமுகம் செய்துவைக்க முயன்றார். "இவர்தான் அண்ணாதுரை" என்று தோழர் ம.பொ.சிவஞனம் அவர்கள் ஆச்சாரியாரிடம் கூறினார். அந்தச் சொற்றொடர் ஆச்சாரியார் காதில் அவ்வளவு சரியாகப் படவில்லை. "யாரு" என்று ஆச்சாரியார் கேட்டார். இவர்தான் அண்ணாதுரை" என்று தோழர் ம. பொ.சிவஞானம் சற்று உரத்த குரலில் கூறினார். உடனே ஆச்சாரியார் பெருவியப்புற்று.மூக்கின்மேல் சுட்டு விரலை வைத்துக்கொண்டு, "இவரா? இவரா அண்ணா துரை?"" என்று வியப்புணர்வு தோன்றக் கேட்டார். பக்கத்தி லிருந்தவர்கள் "ஆமாம்! ஆமாம்!" என்று கூறினர். மீண்டும் ஆச்சாரியார் "இவரா? அண்ணதுரையா? அண்ணாதுரை என்றால், ஒருபிரம்மாண்டமான, ஒரு பயங் கரமான மனிதராக இருப்பார் என்றுதான் இதுவரையில் நான் எண்ணிக்கொண்டிருந்தேன்!" என்றார். " பிறகு தோழர் ம.பொ.சிவஞானம் அவர்கள் நெடுஞ்செழியனைச் சுட்டிக்காட்டி, "இவர்தான் நெடுஞ்செழியன்!" என்றார். ஆச்சாரியார் நிமிர்ந்து பார்த்துவிட்டு, சரி! இவர் 66 நெடுஞ்செழியன், அண்ணாதுரை என்கிறீர்களே!' என்று அண்ணாவைச் சுட்டிக்காட்டி வியப்போடு சிரித்துக்கொண்டு கேட்டார். பக்கத்திலிருந்த ஒருவர்,"இவரைப் படத்தில் பார்ப்பதற் கும் நேரில பார்ப்பதற்கும் ஒவ்வளவோ வித்தியாசம் இருக் கிறது" என்றார். ஆச்சாரியார் "நான் படத்தில்கூட இவரைப் பார்த்ததில்லை. காதால்தான் இவரைப் பற்றி
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
