எளிய வாழ்க்கை அறிஞர் அண்ணா அவர்கள், பள்ளி - கல்லூரி ஆகிய வற்றில் படித்த அந்த நாட்களிலும் சரி, பொதுப்பணியில் றங்கித் தொண்டாற்றி வரும் இந்த நாட்களிலும் சரி ஆடம்பரமற்ற மிகமிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்து வருபவராவார்கள். - அவரின் - அறிஞர் அண்ணாவை நேரில் காணாமல் அறிவையும், ஆற்றலையும் மட்டும் கேள்விப்படுவோர்கள் முதலில், அவர் ஒரு கம்பீரமான - ஆடம்பரமான - மிடுக் கான தோற்றமுடையவராக இருப்பார் என்றுதான் தம் மனதிற்குள் எண்ணிக்கொள்வார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், அறிவும் ஆற்றலும் அற்றுச், கூழை மட்டை, பேயத்திக்கொம்பு, முருங்கைமிலாறு, தாழங்காய் ஆகியவற்றின் வரிசையிலே வைத்து எண்ணப்படக்கூடிய சிலர், நாட்டுக்கான தலைவர்கள் தாமே என்று சொல்லிக் கொண்டு ஆடம்பரமாகத் திரிவதைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட மக்கள், அறிவிலும் ஆற்றலிலும் மிகஉயர்த்து விளங்கும் அறிஞர் அண்ணா அவர்கள் மிக்க ஆடம்பரமான தோற்றமுடையவராகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்வது இயல்பு ஆகிவிட்டதே ஆகும். அப்படிப் பட்டவர்கள் அண்ணாவை நேரில் காணும்போது, தம்முடைய எண்ணத்திற்கு நேர்மாறாக அவர் தோற்ந
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/112
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
