பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மளிப்பதைக்கண்டு திடுக்கிட்டுத் திகைத்து மலைத்துப் போய் நின்று விடுகின்றனர். ஆச்சாரியாருக்கே அந்த நிலை மற்றவர்களைப் பற்றிக் கூறவும் ஏற்பட்டதென்றால், வேண்டுமா? எளிமை வற்றிற்கு - - பொறுமை -அடக்கம் ஆகிய இனிமை அரசியல் உலகில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு காட்டவேண்டுமானால், அறிஞர் அண்னாவைத்தான் குறிப்பிடவேண்டும். தலைமயிரை வாருவதைப் பற்றியோ, ஆடம்பரமான உடைகளை உடுப்பதைப்பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் விரிந்து பரந்த தலைமயிருடன், அழுக்கேறிய ஆடைகளுடன், காலில் செருப்பு இல்லாமல் சுையில் பேனா கடிகாரம் இல்லாமல் சட்டைப்பையில் இல்லாமல், (பெரும்பாலான நேரங்களில்) (மணிபர்ஸ்)இல்லாமல் காட்சியளிக்கும் அண்ணாவைத்தான் பெரும்பாலும் பார்க்க முடியும். பணப்பை அறிஞர் அண்ணா அவர்கள் எளிமையாகவும் இனிமை யாகவும் பழகுவதற்கேற்ற பண்புடையவர்களைத்தான் நண்பர்களாகச் கொள்வார்களே யொழிய தரம் - தகுதி- திறமை பார்த்து நட்பு செய்துகொள்ளும் ஆடம்பரப் பழக்கம் அவரிடம் அறவே கிடையாது. அண்ணா அவர்கள் கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு, வேலைக்கு எதற்கும் போகாமல், பொதுப்பணியில் நாட்டம் செலுத்திக்கொண்டிருந்தபோது அவருக்கு உற்ற நண்பர்களாக உடனிருந்தவர்சளில் குறிப்பிடத் தகுந்தவர் கள் சின்னக்கண்ணு, கணேசன், இரெங்கநாதன் ஆகியோர் கள். சின்னக்கண்ணு பொடிக்கடை கலைத்திருந்தவர்; கணேசன் நாட்டு வைத்தியம் செய்து வந்துவர்; இரெங்கநாதன் இரவு பகலாக இயக்கத் தொண்டு செய்து வந்தவர். அண்ணா உள்ளிட்ட இந்த நாலவரையும்,