பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திய விழா மிக இற்றைக் காலத் தமிழக வரலாற்றில், பொன்னாடை போர்த்தும் விழாக்கள் பலப்பல நடைபெற்று வருகின்றன. அவற்றில் மற்றெல்லாவற்றைக் காட்டிலும் எழிலுடையதாகவும், பெருமைமிக்கதாகவும், முதன்மை வாய்ந்ததாகவும் முக்கியம் பொருந்தியதாகவும், எல்லோரா லும் ஆதரிக்கப்பட்டதாகவும், எல்லாக் கட்சிகளாலும் போற்றப்பட்டதாகவும் அமைந்த ஒரு பெரும் விழா புரட்சிக் கவி பாரதிதாசன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திய விழாவேயாகும். அது 1946-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அந்து விழாவினை வெற்றி கரமாக்க முன்னின்று முயன்ற பெருமையெல்லாம் அறிஞர் அண்ணா அவர்களையே சாரும். அந்தப் பொன்னாடை போர்த்திய விழாவின்போது, இற்றைக்காலத் தமிழ்ப் புலவர் வேறு யாருக்கும் அளிக்காத வகையில் புரட்சிக் கவிஞர் அவர்களுக்குபெரும் பொற்கிழி (பணமுடிப்பு) ஒன்றும் அறிஞர் அண்ணா அவர்களின் பெரு முயற்சியால் அளிக்கப்பட்டது. புரட்சிக்கவிஞர் பாசதி ராசன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியt வேலையினின்றும் இளைப்பாறிப் பொதுப் பணியில் நேரடியாக இறங்கிய காலையில், அவருக்குப்