113 பொற்கிழி வழங்க வேண்டும் என்ற எண்ணம் நண்பர்கள் சிலர்க்கு ஏற்பட்டது. நிதி திரட்டும் முயற்சியில் தோழர்கள் கிருட்டினராசு, செல்லப்பர், டி.என். இராமன், ப.கண்ணன் ஆகியோர் தீவிர பங்கு கொண்டனர். 19/5-ஆம் ஆண்டில் திருச்சியில் கூடிய திராவிடக் கழக மாநாட்டில் அந்த முயற்சிக்கு ஆதரவு தரும்வசையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. எனினும் நிதி திரட்டும் முயற்சி பாராட்டத்தக்க வகையில் அவ்வளவாக வெற்றிபெற வில்லை. பிறகு நிதிக்குழுவினர் அறிஞர் அண்ணா அவ களின் முழு ஆதரவையும்,முழுஒத்து= ழப்பையும் நாடினர். அறிஞர் அண்ணா அவாகள் புரட்சிக் கவிஞருக்குச் செய்திடும் சிறப்பு தமிழக்கு - தமிழகத்திற்கு-திராவிடத் திற்கு - திராவிட இயக்கத்துக்குச் செயதிடும் சிறப்பு என்று கருதி முழுமூச்சோடு பணியாற்றத் தொடங்கினார்கள். - அறிஞர் அண்ணா அவர்கள் புரட்சிக் கவிஞருக்கு நிதி சேர்த்திடும் பணியில் இறங்கியிருந்தது பெரியார் இராமசாமி அவர்களுக்கு விருப்பமிலலை. அந்த முயற்சியையே வெறுத்தார். அதனால் அண்ணா அவர் களையும் வெறுக்கத் தலைப்பட்டார். பெரியாரின் சினம் மூண்டு எழுந்தாலும், சீரிய பணியீனைச் செய்கிறோம்- கடமையைச் செய்கிறோம் என்ற உணர்வில் அறிஞர் அண்ணா பெரியாரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பணியாற்றினார்கள். பெரியார் அவர்களுக்கும் அண்ணா அவர்களுக்கும் மாறுபாடு ஏற்படக் காரணமாக இருந்தவை களில் புரட்சிக் கவிஞருக்கு நிதிசேர்த்த முயற்சியும் முக்கிய மான ஒன்றாகும். அறிஞர் அண்ணா அவர்கள் சில தினங்களுக்குள் ஏறத்தாழ இருபத்தினான்கு ஆயிர ரூபாய சேர்த்துப் பொன்னாடை போர்த்தும் விழாவையும், பண முடிப்பு
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
