பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவைப்பற்றி அழகிரி அறிஞர் அண்ணா அவர்கள் பொதுத் தொண்டில் இறங்கி இயக்கப்பணி செய்யத் தொடங்குவதற்கு முள் னால், இயக்கத்தில் ஈடும் எடுப்பும் அற்ற சிறந்த சொற் பொழிவாளராய் இயக்கத்தவராலும் பொது மக்களாலும் பெரிதும் விரும்பப்படும் பேச்சில் வல்லவராய்ப், புகழும் பெருமையும் பெற்றவராய், தாமே சிந்தித்துச் சொல்லும் அஞ்சா நெஞ்சினராய் விளங்கியவர் காலஞ்சென்ற பட்டுக் கோட்டை கேவி. அழகிரிசாமி ஆவார்கள். இப்பொழுது அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு ஓடுவதைப் போல், அந்த நாட்களில் அஞ்சாநெஞ்சர் அழகிரிசாமி அவர்களின் பேச்சைக் கேட்க மக்கள் விழுந்தோடுவார்கள். இயக்க வளர்ச்சியிலே அக்கரையும், கொள்கையைப் பரப்புவதிலே ஆர்வமும் கொண்டு, அறிஞர் அண்ணா அவர்கள் பின்னை நாட்களில் எப்படிப் பெரியார் இராமசாமி அவர்களுக்கு உறுதுணையாக விளங்கினார் களோ, அப்படியே அழகிரிசாமி அவர்கள் முன்னை நாட் களில் பெரியார் அவர்களுக்கு உறுதுணையாக விளங்கி ணார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் இயக்கப்பணியில் இறங்கி வேலை செய்யத் தொடங்கியகாலை, பெரியார் இராம சாமி அவர்களைப்போலவே தோழர் அழகிரிசாமி அவர்களும்