118 அண்ணாலைப் பெரிதும் வரவேற்றுப் பாராட்டி மகிழ்ந் தார்கள். நாளடைவில் அண்ணா அவர்களை சுற்றிப் பெரு மையும் புகழும் பெருமளவுக்கு வட்டமிடத் தொடங்சவே, அந்த நிலை பெரியார் அவர்களுக்கு எப்படி உள்ளூர மனப் புழுக்கத்தைத் தந்ததோ, அப்படியே தோழர் அழகிரிசாமி அவர்களுக்கும் உள்ளூர மனப்புழுக்கத்தைத் தந்தது. அந்த மனப்புழுக்கம், அண்ணாவை வெறுக்கும்படி அவரைச் செய்துவிட்டது என்னலாம். கடலூர் மாநாட்டிலும், தூத்துக்குடி மாநாட்டிலும் அண்ணாவின்மீது தாம் கொண்ட பகைமையுணர்ச்சியை வெளிப்படையாகவே ஆனால் அண்ணா அவர்கள் தம் இயல்புக்கு ஏற்றபடி அவற்றையெல்லாம் பொருட்படுத் தாமல் இருந்து வந்தார்கள். காட்டிக்கொண்டார். அழகிரிசாமி அவர்கன் மரணப்படுக்கையில் கிடக்கும் போதுதான், அண்ணாவின் அரிய பண்பாடுகளையும் அருமை பெருமைகளையும் உணர்ந்தார்; அவற்றை வாய் விட்டு சொல்லிவிட்டார். அதுவரையில் பெரியாரை உற்ற நண்பராகவும், அண்ணாவைப் படுஎதிரியாகவும் கருதிவந்த அழகிரிசாமி அவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும்போது தான், தன் கருத்தை மாற்றிக் கொண்டார். அழகிரிசாமி அவர்கள் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக் கையில் கிடைக்கும் போது, அவரால் அதுகாறும் உற்ற நண்ப ராகக் கருதப்பட்ட பெரியார் அவர்கள் எவ்வித உதவியும் செய்ய முன்வராமலிருக்கும் நிலையில், அழகிரியால் படுஎதிரி யாகக் கருதப்பட்ட அண்ணா அவர்கள்,தான் உதவிசெய்ய ஓடோடியும் வந்தார்கள். சென்னையில் அண்ணா அவர்கள் தாம் நாடகம் ஆடியதன்மூலம் திரட்டிவைத்திருந்த ரூபாய் எண்ணூற்றுக்கு மேற்பட்ட தொகையை, அழகிரி அவர் சுளுக்குக் கொடுத்து உதவியதோடு, தம்மைக் கூட்டத் திற்குக் கூம்பிடுவோர் நூறு ரூபாயைத் தோழர் அழகிரி
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/119
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
