11 பட்டன. நாங்கள் எங்களுடைய நோக்கங்களையும், நடத் தவைகளையும் கூறி எதிர்வழக்காடினோம். இரண்டு தினங் களுக்குப்பிறகு எங்கள் வழக்குகள் முடிவுற்று எங்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. எங்களுக்கு மூன்று திங்கள் சிறை வாழ்வு தண்டனையாக அளிக்கப்பட்டது. தண்டனை பறுவதற்கு முன்பே, அதாவது வழக்கு நடந்து கொண்டி ருக்கும் போதே நாங்கள் ஈட்டுறுதி கொடுத்துவிட்டு வெளியே வர மறுத்துவிட்டு இரண்டு திங்கள்களுக்கு மேல் சிறைவாழ்வைப் பெற்றேன். தண்டனைக்குப் பிறகு மூன்று திங்கள்கள் சிறைவாழ்வைக் கழிக்கவேண்டி நேரிட்டது. . சென்னை மத்திய சிறையில் நானும் அறிஞர் அண்ணா அவர்களும் ஒரே கொட்டடியில் அடைக்கப்பட்டோம். மற்ற நண்பர்கள் தனித்தனிக் கொட்டடிகளில் அடைக்கப் பட்டார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களோடு நான் சிறையில் கழித்த அந்த நாட்கள் என்றென்றும் எனது மனதை வீட்டு அகல முடியாத நாட்களாகும். அந்த நாட்களிலும் நானும், ஏனைய நண்பர்களும் அறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து பெற்ற அறிவுரைகள் விளக்கவுரைகள் - தெளிவுரைகள் - - -6 துரைகள் அரசியல், - கனிவுரைகள் கருத் பொருளியல் சமூகவியல் பற்றிய உண்மைகள் மிகப் பலவாகும். நாள்தோறும் மாவை 4-30 மணியிலிருந்து மாலை 6 மணிவரையில் (அதாவது எங்களைக் கொட்டடிக்குள் அடைக்கும் நேரம் வரையில்) சிறையிலுள்ள பெரிய அரச மரத்தடியின் மேடையில் அமர்ந்து அறிஞர் அண்ணா அவர் களோடு அளவளாவுவோம்.நாங்கள் எழுப்புகிற ஐயங்கள், வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் தெள்ளநதெளிவாக நாங்கள் மறுப்புரை கூற முடியாத வகையில் விளக்கங்கள் அளிப்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
