பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 சாமி அவர்களுக்கு அனுப்பிவிட்டுத் தம்மைக் கூட்டத் திற்குக் கூப்பிட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்திருந் தார்கள். அந்த வகையில் ரூபாய் அறுநூற்றுக்கு மேல் அழகிரியிடம் போய்ச் சேர்ந்தது. நோய்வாய்ப்பட்டு வறுமையில் கிடந்து உழன்று கொண்டிருந்த அழகிரி அவர் களுக்கு, அண்ணாவின் உதவி பெருத்த ஆறுதல் அளித்தது. . கலங்கிய வண்ணம • தோழர் அழகிரிசாமி அவர்கள் இறந்துபடுவதற்குச் சிலநாட்களுக்கு முன்பு தோழர் நெடுஞ்செழியன் அழகிரி சாமியைக் காண தஞ்சை சென்றிருந்தார். அதுபோது தோழர் அழகிரிசாமி, மரணப் படுக்கையில் கிடந்து, கண் அவரிடம் கூறிய சொற்கள் ஆம். தம்பீ! நான் யாரை நண்பனாகக் கருதவேண்டுமோ, அவனை என் எதிரியாகக் கருதினேன; யாரை என் எதிரி யாகக் கருதவேண்டுமோ அவரை நண்பனாகக் கருதினேன; ஆபத்துக்காலத்தில் தானே நண்பனின் தன்மையை அறிய முடியும் என்கிறார்கள்; அத்தகைய நண்பன் அண்ணாதுரை உருவத்தில் எனக்குத் தோன்றுவான் என்பதை இதுவரை யில் நான் உணராமல் இருந்துவிட்டேன்; அது என தவறு தான்! நான் குடித்தேன், ஆகவே கெட்டுப் போய்விட்டேன் என்கிறாராம் பெரியார்! எனது பலக்குறைவின் நிழலில் நின்றுகொண்டு தம் மகிழ்ச்சியைக்கட்டி மகிழ்கிறார்கிழவர்? மகிழட்டும்!. அண்ணாதுரையின் மீதுதான் எனக்கு என்ன கோபம்? அப்படி ஒன்றுமில்லை அவன் இயக்கத்தைவிட்டு ஒதுங்கிச் செல்கிறானே என்பதுதா எனக்கு வருத்தம்! அண்ணாதுரை கண்டெடுக்கமுடியாது கருத்துக் கருவூலத் தின் பெட்டகம்! அவனுக்கு நான் கைமாறு செயயப் போகிறேன்! என் இதயத்தில் பொங்கிவழியும் அன்பைத் தான் நான் காணிக்கையாகத் தந்ததாக நீ அவனைக் காணும் போது சொல்லு!" என்பவையாகும். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்பு அறிஞர் அண்ணா அவர்களிடம் எந்த அளவுக்கு மிளிரு கிறது என்பதை மேற்கண்டவற்றிலிருந்து உணரலாம். மன்றம், நாள்: 1, 4, 56