பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புச் சட்டைப் படை "கறுப்புச் சட்டைப் படை" என்ற பெயரில் தொண்டர் படை ஒன்று நிறுவ வேண்டும் என்ற தீர்மானம், முதன் முதல், 1945-ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற திராவிடக் கழக மாநில மாநாட்டில்தான் நிறைவேற்றப் பட்டது. அவர் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அறிஞர் அண்ணா களேயாவார்கள். சுழகத் தொண்டர் படைநிறுவுனது பற்றிப் பெரியார் இராமசாமியும் அறிஞர் அண்ணாவும் கலந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, தொண்டர் படைக்கு எந்த நிறச் சட்டையை ஏற்படுத்தலாம் என்ற பேச்சு எழுந்தது. அப்பொழுது மஞ்சள் காங்கிரசின் நிற மாசவும், சிவப்பு கம்யூனிசுட்டின் நிறமாகவும், பச்சை முசுலீம் லீக்கின் நிறமாகவும், ஊதா ராடிக்கல் டெமாக்ர டிக் கட்சியின் நிறமாகவும் பொதுவாக நாட்டினரால் கருதப்பட்டு வந்தன. கழகத்தின் நிறமாக அவை தவிர்த்த வேறொர் நிறத்தைத் தேடவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. கழகத் தொண்டர் படைக்குக் கறுப்புச் சட்டையை அடையாளமாகக் கொள்ளலாம் என்றும். இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் காரியால்டியின் விடு தலைப் படை கறுப்புச் சட்டைப் படை என்றுதான் வந்தது என்றும், எனவே கழகத்தின் அழைக்கப்பட்டு