121 தொண்டர் படைக்குக் கறுப்புச்சட்டைப் படை என்று பெயரிடலாம் என்றும் அறிஞர் அண்ணா அவர்கள் தெரி வித்தார்கள். அண்ணாவின் கருத்து பெரியாருக்கு ஏற் புடையதாகவே பட்டது. பிறகு அது மாநாட்டில் தீர்மான வடிவு பெற்றது. தீர்மானம் நடைமுறைக்கு வரும்போது, வேறு உருவம் பெறத் தொடங்கிற்று. தொண்டர் படைக்கு என்று ஏற் படுத்தப்பட்ட கருப்புச்சட்டை அடையாளம், கழகத் தோழர்கள் அனைவரும் போட்டுக் கொள்ளவேண்டிய அடையாளமாசுப் பெரியாரால் மாற்றப்பட்டது. தீர் மானம் ஒன்று, நடைமுறை வேறாக அமைந்தது. இந்தப் போக்கு அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பொறுக்கி எடுக்கப்படும் தொண்டர் படையினர் மட்டுந் தாம் முறையான கறுப்புச் சட்டை அணியவேண்டுமே யல்லாமல் கழகத் தோழர்கள் அனைவரும் கண்ட கண்ட படி கறுப்புச் சட்டையை அணியக்கூடாது என்பது அறிஞர் அண்ணாவின் கருத்தாகும். போலீசுக்காரன் உடையை) பிறர் எப்படி அணியக் கூடாதோ, படைவீரனின் உடைபைப் பிறர் எப்படிப் போட்டுக்கொள்ளக் கூடாதோ, நீதிபதியின் உடைகளைப் பிறர் எப்படி மாட்டிக்கொள்ளக் கூடாதோ? அப்படியே கறுப்புச் சட்டையைத் தொண்டர் படையினர் தவிர பிறர் அணியக்கூடாது என்ற முறை வேண்டும் என்று அண்ணா அவர்கள் பெரியாரிடத்தில் பலதடவை வாதாடி னார்கள். கடமை யுணர்ச்சியுள்ள தகுதிவாய்ந்த கழகத் தொண்டர்மட்டுந்தான் கறுப்புச்சட்டை அணியவேண்டும் என்றும் அந்த வகையில் அதன் மதிப்பு போற்றிக் காப் பாற்றப்படவேண்டும் என்று அண்ணா அவர்கள் கருதி னார்கள். இல்லையாயின் கறுப்புச் சட்டையின் மதிப்பு பல வகைகளிலும் குறைக்கப்பட்டுப் போய்விடும் என்று அவர்கள் கருதினார்கள். குறிப்பிட்ட பணியைக், பணியைக், குறிப்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/122
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
