122 என்றும் பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் செய்யும்போது தான் கறுப்புச் சட்டை அணியவேண்டுமே தவிர எங்கும் எப்பொழுதும், எந்தப்பணியைச் செய்யும்போதும் அணியக் கூடாது என்ற வரைமுறை இருக்கவேண்டும் அண்ணா அவர்கள் எடுத்துரைத்தார்கள். ஆனால் பெரியார் அவர்கள் அண்ணாவின் கருத்துக்களைச் செவி மடுக்கத் தயாராக இல்லை. கறுப்புச் சட்டையைப் போட் டுக்கொள்ள அண்ணா அவர்கள் வெட்கப்படுகிறார் என்று தவறாகக் கருதிக்கொண்டு, பெரியார் அவர்கள், கழகத் தோழர்கள் எல்லோரும், எப்பொழுதும், எங்கும் கறுப்புச் சட்டையைக் கூடுமானவரையில் அணியவேண்டும் என்று அண்ணாவின் கருத்துக்கு எதிரான முறையில வற்புறுத்தி வரத் தொடங்கினார்கள், அந்து முறை அண்ணாவுக்கு அறவே பிடிக்கவில்லை. அண்ணா அவர்கள் தலைவரின் கட்டுப்பாட்டின் காரணமாக மேடை ஏறிப் பேசும்போது மட்டும் வேண்டா வெறுப்போடு கறுபபுச் சட்டையை அணிந்து வந்தார்கள். அதனாலதான் வரையறையற்ற முறையில் கறுப்புச் சட்டையணியும் பழக்கத்தை அண்ணா அவர்கள் மேற்கொள்ளவில்லை; மேற்கொள்ள விரும்ப வில்லை. கறுப்புச் சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்ட போது இயக்கத்தில் மிக்க தொடர்பு கொள்ளாமல் அது வரையில் ஒதுங்கி நின்ற அறிஞர் அண்ணா அவர்கள் கறுப்புச்சட்டை அணிந்துகொண்டு ஓடோடியும் கருப்புக் கொண்டார்கள். சட்டை மாநாட்டில் கலந்து இது அண்ணாவின் தூய பண்பையும், கடமை யுணர்ச்சியையும் காட்டுவதாகும். மன்றம், நாள்: 154.56,
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/123
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
