பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1947 ஆகஸ்டு 15 இந்தியத் துணைக் கண்டத்தை-இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, அவைகளுக்கு 1947 ஆகஸ்டு 15ல் விடுதலை வழங்குவது என்று பிரிட்டிஷ் வல்லரசு முடிவு செய்து அதனை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியினரும், முஸ்லீம் லீகினரும் அந்த முடிவை முழுமன தோடு வரவேற்றனர். நாட்டிலுள்ள பிற பெரும்பாலான அரசியல் கட்சிகளைச் சார்ந்தோரும், பொது மக்களும் இந்தியத் துணைக் கண்டத்திற்குக் கிடைக்கும் விடு தலையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் தோன்ற வில்லை; திராவிடக் கழகம் மட்டுமே இருந்து வந்தது. கழகத்தினர் எல்வோரும் ஆகஸ்டு 15ஆம் நாளை வரவேற் பதா ? அல்லது வெறுப்பதா? என்ற குழப்பமான நிலையில் இருந்தனர். அப்பொழுது திராவிடக் கழகத்தலைவராக இருந்த பெரியார் இராமசாமி அவர்கள், கழகச் செயற் குழுவைக் கூட்டாமல், கழக முன்னணியினர் யாரையும் கலக்காமல், ஆகஸ்டு 15ஆம் நாளைத் துக்க நாளாகக் கொள்ளும்படி அறிக்கை வெளியிட்டு விட்டார்கள். ஆகஸ்டு 15ஆம் நாளில் நடைபெறுவதாக இருந்த தெல்லாம், இந்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெள்ளை ஏகாதிபத்தியம் விலகுவது என்பதும், இந்திய யூனியன் ஆட்சிப் பொறுப்பைப் பெரும்பான்மையான அரசியல் கட்சி