என்று தூத்துக்குடி மாநாடும் ஈரோடு மாநாடும் 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் வெள்ளையர் ஆதிக்கம் வெளியேறிய நாளாதலால், அது மகிழ்ச்சிக்குரிய நாளே அறிஞர் அண்ணா அவர்கள் கூற, காங்கிரசார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதால் அது துக்கத்திற்குரிய நாளே என்று பெரியார் இராமசாமி அவர்கள் கூற அப் பொழுது கழகத்தோழர்கள் கருத்தில் இரு வேறு பகுதியின ராகப் பிரிந்தனர். பெரியார் கூறினாலும் அதைப் பற்றிச் சிந்தித்து அதில் தெளிவு பெற வேண்டும் என்று கருதின வர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் கூற்றையும், பெரியார் கூறிவிட்டதால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கருதியவர்கள் பெரியார் கூற்றையும் ஆதரித்து நின்றனர். அண்ணாவைப் பின்பற்று வோர், பெரியாரைப் பின்பற்றுவோர் என்று இரண்டு பிரிவினராகக் கழகத் தோழர்கள் பட்டும் படாததுமாகப் பிரிந்திருந்தனர். 1948 இடைப்பகுதியில் தூத்துக்குடியில் திராவிடக் கழக மாநில மாநாடு கூட்டப்பெற்றது பெரியார் அவர் களே முன்னின்று மாநாட்டிற்கான எல்லா ஏற்பாடு களையும் செய்தார்கள். அண்ணாவும் அவரைச் சார்ந் தோரும் தம்மைக் கவிழ்க்கத் திட்டம்போட்டிருப்பதாகவும், அவர்கள் மாநாட்டிற்கு வந்து குழப்பம் செய்ய இருப்ப தாகவும், அவர்கள் குழப்பம் செய்யும்போது தமமைப்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/127
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
