127 வாங்கிக் பின்பற்றுவோர் அடி, உதை ஆகியவைகளை கொண்டு அபைதியாக இருக்கவேண்டும் என்றும் பெரியார் மாநாட்டிற்கு முன்பு பொதுக் கூட்டங்களில் பேசியும், 'விடுதலை'யில் எழுதியும் வந்தார்கள். அவர்கள் மனம் இல்லாத ஒன்றைக்கற்பனை செய்துகொண்டு பேசியும், எழுதியும் வந்த பெரியாரில் போக்கைக் போக்கைக் கண்டு வருந்திய அண்ணா அவர்களும் அவரைச் சார்ந்த பிறரும் மாநாட்டிற்குப் போகாமல் இருந்துவிடுவது மேல் என்ற மூடிவுக்கு வந்தனர். மாதாட்டில் கூடியிருந்த மக்களில் பெரும்பாலோர் அண்ணாவின் வரவை எதிர்பார்த்திருந்து தன்மையும் 'அண்ணா ஏன் வரவில்லை?+ என்று பலர் கேட்ட கேள்வியும் பெரியார் அவர்களுக்கு பொறாமை யையும், எரிச்சலையும், சினத்தையும் மூட்டிவிட்டன. அது காரணமாகப் பெரியார் அவர்கள் மாநாட்டில் பேகம் போது அண்ணாவைக் கண்டவாறு இழித்துக்கூறவும் செய் தார்கள். மாநாடு முடிந்ததற்குப் பிறகு பெரியாரைப் பின்பற்று வோர், அறிஞர் அண்ணாவையும், அவரைப் பின்பற்று வோரையும் கண்டகண்ட இடங்களில் ஏசவும், தூற்றவும், வெறுக்கவும் தலைப்பட்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாகக் கடமையை ஆற்றி வந்தார்கள். பிறகு 1948 ஆகஸ்டு திங்கள் வாக்கில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மூண்டது. அறிஞர் அண்ணாவும் பிறரும் தீவிரப் பங்கு கொண்டனர். கிளர்ச்சியின் படைத் தலைவராக அண்ணா அவர்கள் பொறுப்பேற்றார்கன. பெரியார் அவர்கள் அண்ணாவிடம் நெருங்கிய தொடர்பும், மிக்க பற்றும் வைக்க முற்பட்டார்கள்.
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/128
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
