x 128 அதே ஆண்டில் தூத்துக்குடி மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் வராததனால் ஏற்பட்ட குறையைப் போக்கப் பெரியார் அவர்கள் ஈரோட்டில் தனி மாநில மாநாடு ஒன்றைக் கூட்டி, அதற்கு அண்ணா அவர்களைத் தலைமை தாங்கும்படி செய்தார்கள். பெரியாரின் போக்கு அண்ணாவிற்குப் பலதடவைகளில் மனக்கசப்பை உண்டாக்கியிருந்தாலும், கடமையாற்ற கழகம் அழைக்கும் போதெல்லாம் அறிஞர் அண்ணா அவர்கள் முன்னணியில் நின்றே பணியாற்றி வந்திருக் கிறார்கள். எனவேதான் தூத்துக்குடி மாநாட்டிற்குக் கண்ணியம் காரணமாகச் செல்லாத அறிஞர் அண்ணா அவர்களை ஈரோடு மாநாடு கடமை காரணமாக வருந்தி அழைத்தது. மன்றம், நாள்: 15.5.56. பயங்கரம் இது பயங்கரம் புது பூந்தோட்டத்திலே உலவிக்கொண்டு மணத்தைப் பெற்று மகிழ்ந்து, ஆடு - மயிலையும், பாடும் குயிலையும், தடாகத்திலே நடமாடும் அன்னத்தையும், கொஞ்சும் கிளியையும் கண்டு களிக்கும் பூவையின் கால்களை மலைப்பாம்பு பின்னிக் கொண்டு இடையே வளைத்து இறுக்கி, அத்துடன் நில்லாமல் அவளுடைய முகத்தருகே தன முகத்தை நிறுத்திச் சீறி, நாவை நீட்டினால் அந்த நாரீமணியின மணம் எப்படி இருக்கும். அறிஞர் அண்ணா
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/129
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
