12 பார்கள். சில நேரங்களில் ஒரு திங்கள், இரண்டு திங்கள் தண்டனை பெற்றுச் சிறைப்பட்ட கழகத் தோழர்களும் மானல் நேரங்களில் அறிஞர் அண்ணாவிடம் வந்து உரையாடி மகிழ்வார்கள். தண்டனை பெற்ற மும்முனைப் போராட்ட வீரர் களெல்லாம் வெளியேறிய பிறகு நாங்கள் ஐவர் மட்டும் இரண்டு திங்கள்களுக்கு போல் தனியே இருக்கும்படி நேர்ந்தது. சிறையிலுள்ள பிற குற்றக்கைதிகளைக் காணும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் அறிஞர் அண்ணா அவர்கள் அவர்களின் தனிப்பட்ட சமூகச் சூழ்நிலைகளை அறிந்துகொள்வதிலும், குற்றம் புரிந்ததற்கான காரணங் களைத் தெரிந்து கொள்வதிலும், இவர்களின் உளப்பாங் கைப் புரிந்து கொள்ளதிலும், தனி ஆவல் காட்டிவந்தார்கள். . மாலை 6-00 மணிக்கு எங்களையெல்லாம் எங்களுக் குரிய கொட்டடிகளில் அடைத்துவிடுவார்கள். அறிஞர் அண்ணாவும் நானும் ஒரேகொட்டடியில் அடைக்கப்பட் டிருந்ததால் இரவு வெகுநோம் வரையில் அவர்களோடு உரையாடி மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் இரவுமூன்றுமணி வரையில் தூங்க மாட்டார்கள். அதற்குப் பிறகுதான் அவர்கள் தூங்க முயலு வார்கள். என்னால் இரவு பதினோரு மணி அல்லது பன்னி ரண்டு மணிவரையில் தான் தூங்காமல் சமாளிக்க முடியும். பிறகு என்னயுமறியாமலேயே தூங்கிவிடுவேன். அண்ணா வுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போதே தூங்கிவிடு வேன். எனக்குத் தூக்கக் கலக்கம் ஏற்பட்டவுடனே . கொட்டாவி வந்துவிடும். நான் கொட்டாவி விடத் தொடங்கும் போது அண்ணா அவர்கள் 'தூக்கத்திற்கு முதல் மணி அடித்தாகிவிட்டது? "இரண்டாவது மணி அடித்தாகிவிட்ட து" என்று கேலி செய்து கொண்டே இருப் L நான் முடிந்தவரையில் சமாளித்துப் பார்த்து
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/13
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
