வடநாட்டில் இந்து முசிலிம் போர் வடநாட்டில் இந்து - முசிலிம்களுக்கிடையே வேற்றுமை யுணர்வும், பிணக்கும், போரும்எந்தவகையில்மூண்டெழுந்து காணப்படுகின்றன என்பதை, அறிந்து கொள்ளும் வாய்ப்பு அறிஞர் அண்ணா அவர்களுக்கு, அவர் பெரியார் ராமசாமி அவர்களோடு வடநாட்டுக்குச் சுற்றுப்பயணத் திற்குச் சென்றிருந்தபொழுது ஏற்பட்டது. உண்ணுவது, நீர் அருந்துவது, உறைவது, வாணிகம் செய்வது ஆகியவற்றில் இந்துவும் முசிலிமும் - ஒருவரை யொருவர் பகைத்துக்கொண்டு, வேற்றுமை பாராட்டித் தனித்தனியே அவற்றைத் ததமதாக கொண்டிருந்து தன்மையை அண்ணா அவர்கள் கண்டபோது, படித்தறி யாப் பண்பறியாப் பாமர மக்களிடததில் மட்டுமே அந்த நிலைமை நிலவி வருவதாக நினைத்துக் கொண்டார்கள். அந்த நிலைமை பாமரமக்களிடத்தில் மட்டும் நிலவவில்லை அது படித்தவர்களிடத்திலும் உண்டு என்பதை அவர்கள் ஜும்மா மசூதிக்குச் செல்லும்போது அறிந்து காண டார்கள். செய்த அறிஞர் அண்ணா அவர்கள் சுற்றுப்பயணம் போது அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கும் பொருட்டு இரண்டு எம்.ஏ.படித்த மாணவர்களை தோழர் எம்.என். ராய் அண்ணாவுடன் அனுப்பி வைத்திருந்தார். அவ்விரு வரில் ஒருவர் முசிலிம், மற்றொருவர் இந்து. இருவரும்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/130
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
