130 தோழர் ராயின் முற்போக்குக் கருத்துக்களில் ஊறித் திளைத்தவர்கள். மசூதியின் மண்டபத்தில் சிலபல ட்டைகள் காணப்பட்டன. அவற்றிற்கான காரணம் என்ன என்பதை அண்ணா அவர்கள் முசிலிம் மாணலரோடு சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சேட்டார்கள். அதற்கு அந்த முசிலிம் மாணவர் "இந்த ஓட்டைகள் இருந்த இடத்தில் பழைய கால முசிலிம் மன்னர்கள் விலையுயர்ந்த கீற்களைப் பதிய வைத்திருந்தனர். அவற்றை யெல்லாம் இந்துக்கள் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். அவைகள் பெயர்க்கப்பட்ட இடங்கள் தாம் இப்பொழுது ஓட்டை களாகத் தென்படுகின்றன" என்று கூறினாராம். சிறிது நேரங்கழித்து இந்து மாணவரோடு வேறு பக்கம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் வாய்ப்பு அண்ணா அவர்களுக்கு ஏற்பட்டது. அண்ணா அவர்கள் மண்டபத்திலிருந்து ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி “இந்த ஓட்டைகளுக்கு என்ன காரணம்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த இந்து மாணவர் "இந்த ஓட்டைகள் இருக்கும் இடங்களில் முன்பு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப் பெற்றிருந்தன. முசிலிம் மன்னர்கள் செல்வமிழந்து வறுமையுற்ற போது அவைகளை யெல்லாம் பெயர்ததெடுத்து விற்று வாழத் தொடங்கினார்கள். ஆகையினால் அக்கற்கள் இருந்த இடங்கள் இப்பொழுது ஓட்டைகளாகத் தென்படுகின்றன" என்று விடையிறுத்தாராம். ל படித்த முற்போக்கு எண்ணங் கொண்ட இரு மாணவர் களிடையே, ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து விளக்கம் கூறுவதில், இந்து - முஸ்லிம் வேற்றுமை யுணர்ச்சி இந்த அளவுக்குக் காணப்படுகின்றது என்றால், மற்ற பாமர மக்களிடத்தில் எந்த அளவுக்கு அது கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்பதை அறிஞர் அண்ணா அவர்கள் தெளிவு
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
