பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 படித்திக் கொண்டார்களாம். இத்தகைய நிலைமையைப் புரிந்து கொண்ட அண்ணா அவர்கள் பாக்கிஸ்தான் பிரிவினை எப்படியும் ஏற்பட்டே தீரும் என்ற கருத்தையும், அதற்கான முறையில் காணப்பட்ட சூழ்நிலையையும் பெரி யாரிடமும் பிறரிடமும் தெள்ளத் தெளிவாக விளைக்கிக் காட்டினார்களாம். மன்றம், நாள்: 1.6.56 குறித்து வைக்காத குறை ஒரு மன்னனுடைய மகன் யாரென்று சரித்திர புத்தகங்களைப் புரட்டினால் வரகுணபாண்டியன் மகன் இரண்டாவது வரகுணபாண்டியன் என்று போட்டு, இது இல்லை என்பாரும் உண்டு என்று அடியிலே குறிப்புத்தரும் வகையில் குழப்பமான வரலாற்றை வைத்திருக்கிறோம். நம்முடைய தமிழ்ப் பண்புக்கு ஏற்றபடி நம்முடைய அருமை பெருமைகளை நாம குறித்து வைத்திருக்கின்ற பழக்கத்தை நெடுங்காலமாக இழந்து விட்டோம். இன்றைய தினம ரோம்நாட்டு வரலாற்றை நீங்கள் துருவிப் பார்க்க வேண்டுமென்றால் ஜூலியஸ் சீசர் அணிந்து கொண்டிருந்த கால்செருப்பின் அளவிலேயிருந்து கிளியோபாட்ரா அணிந்திருந்த காதணிவரை வரலாற்றுக் குறிப்பு உண்டு. ஆனால் தமிழகத்தின் வரலாற்றை நீங்கள் பார்க்கவேண்டு மானால், இந்த மண்டலத்திலே ஆண்டு கொண் டிருந்த மன்னன் இன்னாருடைய மகன் என்று கூறு வதற்கு இரண்டு மூன்று வரலாற்று ஆசிரியர்களும், நான்கைந்து, தமிழ்ப் புலவர்களும், பத்துப் பதினைந்து திங்கள் சேர்ந்து உட்கார்ந்தாலும் ஆளுக்கொரு செய்தியைத்தான் தரமுடியுமே தவீர், அத்தனை பேரும ஒத்த கருததைத் தர முடியாத ஒரு நிலையிருக்கிறது. அறிஞர் அண்ணா