நண்பருக்காகத் தன்னலம் துறக்கும் தன்மை அறிஞர் அண்ணா அவர்கள் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் ஆனர்சு வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, சம்பந்தம் என்பவர் அண்ணாவோடு ஒரே வகுப்பில் படிக்கும் மாணவராகவும், அண்ணாவுக்கு உற்ற நண்பராக வும் விளங்கி வந்தார். இருவரும் இணைபிரியா நண்பர் களாக இருந்து ஒரே அறையில்உறைவது, ஒன்றாக இருந்து படிப்பது, ஒன்றாகச் சேர்ந்து கல்லூரிக்குச் செலவது, ஒன்றாகச் சோந்தே எல்லாக் கடமைகளையும் செய்வது ஆகிய பழக்கங்களைக் கொண்டிருந்தனர். சம்பந்தம் என்ற அந்த நண்பர் இயல்பாகவே அச்சம், நாணம் வெட்கம், கூச்சம் ஆகிய பண்புகளுக்கு இரையான வர். அவர் எங்கே போவதானாலும், எந்தச் செய்வைச் செய்வதானாலும் அண்ணா அவர்கள் தாம் அவருக்கு உற்றதுணை, அவருடைய இயல்பு இரங்கத்தக்கதாக இருந்த காரணத்தால்தான், அண்ணா அவர்கள் அவருக்கு உற்ற நண்பராகவும், உறுதுணையாகவும் விரும்பியிருந்து வந்தார்கள். அண்ணா அவர்கள் பொதுவாக ஊண் உறக்கமின்றி விழுந்து ஓயாமல் படித்துக் கொண்டேயிருக்கும் பழக்கத் தைக் கொண்டிருந்தவரல்லர். தேர்வுக்குச் சில நாட் களுக்கு முன் இரண்டொருமுறை பாடப் புத்தகங்களைப் புரட்டிப் பார்ப்பது, அந்த அளவிலே பாடங்களை உள்ளத்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/136
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
