136 திலே பதிய வைத்துக் கொள்வது, யாதொரு அச்சமோ மனக்கலக்கமோ இல்லாமல் தேர்வு எழுதி வெற்றி பெறுவது, என்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரது நண்பரோ நேர்மாறான பழக்கத்தைக் கொண்டிருந்தவர். ஓயாமல் படித்துக் கொண்டே இருப்பார். அச்சத்தோடு தேர்வு எழுதுவார். அண்ணாவைவிடக் குறைவான எண் கள் பெறுவார். ஆனர்சு எ இருவரும் தம்மை நல்ல முறையில் ஆயத்தப்படுத்திக் கொண்டு முடிவுத் தேர்வாகிய ஐந்தாவது ஆனர்சுத் தேர்வில் கலந்துகொண்டு எழுதினார்கள். மூன்று நாட்கள் அண்ணா அவர்கள் நல்ல முறையில் வெற்றிபெறும் மன உறுதியோடு தேர்வுத தாள்கள் எழுதினார்கள். ஆனால் அவரது நண்பரோ மிகமிக அச்சமுற்று, மனங்கலங்கி, தேர்வுத் தாள்களைச் சரிவர எழுதவில்லை. மேற் கொண்டு மூன்று நாட்கள் எழுத வேண்டியிருந்தது. வகுப்பில் படிப்பவர் எல்லாத் தாள்களையும் ழுதாமல், மறு ஆண்டில் எழுதுகிறேன் என்று கேட்டுக் கொண்டால்தான் மறு ஆண்டுத் தேர்தலில் கலந்து கொள்ளப் பல்கலைக் கழகத்தார் அனுமதிப்பார்கள். அதன்படி தேர்வில் கலந்து கொள்வது என்று முடிவு செய் தார். அத்தோடு நிற்காமல் அவர் அண்ணா அவர்களைப் பார்த்து "நீயும் மேற்கொண்டு தேர்வு எழுத வேண்டாம் நின்றுவிடு. இருவரும் சேர்ந்து அடுத்து ஆண்டு எழுது வோம். நீ இப்பொழுது எழுதி வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த ஆண்டு என்னோடு சேர்ந்து படிக்கவோ தேர்வு எழுதவோ வேறு யாரும் துணையிருக்க மாட்டார்கள். எனவே நின்றுவிடு என்று பலவாறாக வற்புறுத்தத் தொடங்கிவிட்டார். அண்ணா அவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கான முழுமனவுறுதி முழுமனவுறுதி தமக்கு இருந்த போதிலும் நண்பரின் வேண்டுகோளுக்கும், வற்புறுத்தலுக்
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/137
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
