137 கும் இணங்கி தேர்வு எழுதாமல் நின்று கொண்டார். அண்ணா அவர்கள் எழுதின தாள்கள் மட்டில் எண்கள் போடப்பட்டு வந்த போது அவற்றில் ஒன்றில் மட்டும் மாநிலத்தில் முதல்வராகக் காணப்பட்டார். மீண்டும் மறு ஆண்டில் எல்லாத் தாள்களையும் எழுதி இருவரும் வெற்றி பெற்றார்கள். நண்பரின் நலத்திற்காகவும் விருப்பத்திற்காகவும், தன்னலத்தையும் துறந்து நடக்கும் தன்மை, அறிஞர் அண்ணா அவர்களிடத்தில்எவ்வளவு சிறப்புற விளங்கிற்று விளங்குகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி சீரியதொரு எடுத்துக் காட்டாகும். மன்றம், நாள் : 1-7-56 தமிழும் ஆங்கிலமும் தமிழைப் பாடமொழியாகவும் பயிற்சி மொழியாகவும் ஆக்கி, அதனால் ஆங்கில அறிவு குறையும் என்று கருதினால் ஆங்கில அறிவை அதிகப்படுத்த என்ன வழிகளை மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்து, ஆங்கில அறிவும் கெடாமல் தமிழ் உரிமையும் பாதுகாக்கப்படக் கூடிய அளவில் நம்முடைய கல்வித் திட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். அறிஞர் அண்ண:
பக்கம்:அண்ணாவோடு வாழ்ந்த அந்தச் சிறைவாசம்.pdf/138
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
